தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today: Checkout Astrological Prediction For April 1, 2023

Today Rasi Palan: பொறுமையை கடைபிடியுங்கள் மக்களே!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 01, 2023 05:00 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய (ஏப்ரல் 1) ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

ட்ரெண்டிங் செய்திகள்

சொந்த பந்தங்களுடன் இணக்கமாக இருக்கும் நாளாக உள்ளது. தாயார் ஆசையை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம், படிப்பு மீது கவலை ஏற்படும்.

ரிஷபம்

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள். வேலை இடத்தில் இருந்த பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண்பீர்கள் உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர் உதவி செய்வார்கள்.

மிதுனம்

ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் நல்ல லாபத்தை தரும். மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் பெறுவீர்கள். வங்கி கடன்களை குறைக்க திட்டம் திட்டூவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

வெளியூர் பயணங்களினால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம். வியாபாரம் மந்தமாக இருந்தாலும் கவலைப்படாதீர்கள். கடுமையாக உழைத்து உற்பத்தியை பெருக்குவீர்கள். எதிர்காலம் கருதி பொறுமையுடன் செயல்படுங்கள்

சிம்மம்

பெண்களிடம் நெருக்கம் காட்டி சிக்கலில் மாட்டிக் மாட்டிக் கொள்ள வேண்டாம். மன வருத்தம் காரணமாக நெருக்கமானவர்கள் பிரிய நேரிடலாம். வாகனம் ஒட்டும்போது கவனம் தேவை. வீட்டை புதுப்பிப்பதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.

கன்னி

பணவரவு அதிகரிக்கும். தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரம் சிறப்பாக அமையும். அரசு வேலையில் சிக்கலான பிரச்னைகள் தீரும். பிரியமானவர்களிடமிருந்து உதவியை கிடைக்கும்.

துலாம்

தொழிலை விரிவுபடுத்த நம்பிக்கையானவர்களிடமிருந்து உரிய ஆலோசனை கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணம் வராததால் வியாபாரத்தில் சுணக்கமான சூழ்நிலை நிலவும். பணி இடத்தில் சக ஊழியர்களால் சங்கடம் ஏற்படலாம். மனைவி மனக்காயத்தை உண்டாக்கலாம். பிள்ளைகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது

தனுசு

நெருக்கமானவர்களை திருப்திப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கவனம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்

பெற்றோர்களின் பாராட்டு கிடைக்கும். உறவினர்களுக்கு உரிய நேரத்தில் உதவுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். கடுமையாக இருந்த உடல் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம்

மற்றவர்கள் ஆச்சர்யப்படும் விதமாக உங்கள் செயல் அமைந்திருக்கும். தொழிலில் மேன்மையடையும். எதிரிகளை வெளியூர்ப் பயணங்கள் புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆடம்பர விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளும்.

மீனம்

வீண் விரயங்கள் ஏற்படலாம். துணையின் கோபத்தால் மன வேதனை அடையலாம். பொறுமையை கடைபிடியுங்கள். உடன் இருப்பவர்கள் தொல்லை தரலாம். அலட்சியமாக இருக்க வேண்டாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்