தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: பணப்புழக்கம் தாராளமாக உண்டு! பாராட்டுகளை பெறுவீர்கள்

Today Rasi Palan: பணப்புழக்கம் தாராளமாக உண்டு! பாராட்டுகளை பெறுவீர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 22, 2022 07:47 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்ளுங்கள்

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்
12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறு ஏற்படும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள். எச்சரிக்கை தேவை.வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

பணியில் மேல் அலுவலர்கள் பாராட்டு கிடைக்கும். உற்பத்தி பெருகும். தொழிலில் உருவாகும் போட்டிகளை முறியடிப்பீர்கள். சிறு வியாபாரிகள் பல வகையில் அனுகூலம் பெறுவார்கள். வெற்றிகரமாக வெளியூர் பயணங்கள் அமையும். பண நெருக்கடி தீர்ந்து மனநிம்மதி ஏற்படும்.

மிதுனம்

விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் புத்திசாலித்தனமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வீர்கள். பணியாளர்கள் ஊக்கத்துடன் வேலை பார்ப்பார்கள். பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்

வேலை செய்யும் இடத்தில் கடுமையான உழைப்பால் நல்ல பெயர் வாங்க நேரிடும். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடைவார்கள். மனைவி மக்களின் ஆதரவால் மன நிம்மதி கிடைக்கும். வீண் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.

சிம்மம்

முன்னேற்ற பாதைக்கான வாய்ப்பு உருவாகும். மேல் அலுவலர்கள் பாராட்டு உற்சாகம் தரும். சிக்கலில் இருந்த வழக்குகளுக்கு சுலபமாகத் தீர்வு கிடைக்கும். வேலைக்காக புதிய வாகனம் வாங்குவீர்கள். பணியாளர்கள் கனிவுடன் கவனிக்கப்படுவார்கள்.

கன்னி

கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். குடும்பத்துக்கு தேவையானவற்றை வாங்கி தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவனின் மனைவி ஆகியோர் மனைவியின் மனம் கோணால் நடந்து கொள்வார்கள்

துலாம்

அரசாங்க வேலைகள் அனுசரணையாக நடக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களின் நல்ல செய்து வரும். புதிய வீடு கட்ட அடித்தளம் அமைப்பீர்கள். சிறு,குறு வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

விருச்சிகம்

கடின உழைப்புக்குப் பின் வெற்றி கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில்கள் சுமாராக நடக்கும். அலைச்சலால் உடல் நல பாதிப்பு, தூக்கமின்மை ஏற்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். ஞாபக மறதி அதிகரிக்கும்.

தனுசு

மேல் அலுவலர்கள் கோபத்துக்கு ஆளாக வேண்டாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்று போராட வேண்ட வரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. பண இழப்பை தவிர்க்க பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

மகரம்

நீண்டகாலத் திட்டம் நிறைவேறும். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். பொருள்கள் விற்பனையால் வியாபாரிகள் உற்சாகம் அடைவார்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள்.

கும்பம்

பண புழக்கம் தாராளமாக இருக்கும். தொழிலில் சாதகமான பலனை அடைவீர்கள். வேலை திறமை வெளிப்படுத்தி மதிப்பை உயர்த்துவீர்கள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.

மீனம்

எதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படலாம். நல்லது செய்தால் கூட தீங்குதான் திரும்ப வரும். நட்பும் விரோதமாக மாறும். இயந்திரங்களில் வேலை பார்ப்பார்கள் கவனமாக இருக்க வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்