House Horoscope: ’சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் நிலை யாருக்கு உண்டாகும்?’ ஜோதிடம் சொல்லும் 4 காரணங்கள்!
எடுத்துக்காட்டாக ஒரு ரிஷப லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். 4ஆம் அதிபதியான சூரிய பகவான் கடகம், துலாம், மேஷம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்தால் சொந்த வீடு இருந்தாலும் வேலை, கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூர்களில் வசிக்க வேண்டிய அவசியம் உண்டாகும்.

சொந்த வீடு என்பது பலருக்குமான கனவாக உள்ளது. சிலர் சொந்த வீட்டை கட்டியும் வெளி ஊர்களில் வாடகை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கும். அதற்கான காரணங்கள் ஏன் என்பதை தற்போது பார்க்கலாம்.
4ஆம் அதிபதியும் செவ்வாயும்!
ஒருவரின் லக்னத்திற்கு 4ஆம் அதிபதி மற்றும் செவ்வாய் பகவானை அடிப்படையாக கொண்டே ஒருவருக்கு வீடு அமைவது குறித்து கணிக்கப்படுகிறது. 4ஆம் அதிபதியோ அல்லது செவ்வாய் பகவானோ சர வீடுகளில் அமர்ந்து இருந்தால் சொந்த வீடுகளில் இருந்தலாலும் கூட நிரந்தரமாக அங்கு வசிக்கும் அமைப்பு இருக்காது. எடுத்துக்காட்டாக ஒரு ரிஷப லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். 4ஆம் அதிபதியான சூரிய பகவான் கடகம், துலாம், மேஷம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்தால் சொந்த வீடு இருந்தாலும் வேலை, கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியூர்களில் வசிக்க வேண்டிய அவசியம் உண்டாகும்.
பாவக் கிரகங்களும்! உடைந்த நட்சத்திரங்களும்!
அதே போல் 4ஆம் வீட்டில் பாவக் கோள்கள் என்று சொல்லக் கூடிய ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் சொந்த வீடு இருந்தாலும் அங்கே நிரந்தரமாக வசிக்க முடியாத நிலை உண்டாகும் . புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய 9 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு இருந்தாலும் அடிக்கடி வாடகை வீடுகளில் வசிக்கும் நிலை உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி வீடு மாற்றம் செய்யக்கூடிய விதிகளும் இவர்களுக்கு உண்டு. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடமாற்றம் என்பது இயல்பானதாக இருக்கும்.
சொந்த வீட்டில் அமரும் யோகம் யாருக்கு?
4ஆம் அதிபதி திக்பலம் பெற்ற நிலையிலோ அல்லது ஸ்திர வீட்டிலோ அமர்ந்தாலோ ஜாதகர் சொந்த வீட்டிலேயே அமரும் யோகம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
