மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. ஜனவரி 7ஆம் தேதிக்கான ராசிபலன்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. ஜனவரி 7ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்துப் பார்ப்போம்.
கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜோதிடம் மதிப்பிடப்படுகிறது. வரும் ஜனவரி 7 செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபட உகந்த நாள் ஆகும்.
இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்நாளில் ஆஞ்சநேயரை வணங்குவது நோய்களையும் துன்பங்களையும் நீக்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 7ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜனவரி 7ஆம் தேதி எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்.
ஜனவரி 7ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசியினருக்கு எவ்வாறு இருக்கும்?
மேஷம் - மேஷ ராசியினர், உங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக, அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கு, கணவன் மனைவி இடையே பேசிக்கொள்ள ஒருவருக்கொருவர் நேரம் இருக்காது. மன அழுத்தத்தைக் குறைக்க உங்களுக்குப் பிடித்த செயலுக்கு நேரம் ஒதுக்குங்கள். செலவுகளைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம் - ரிஷப ராசியினர், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு வாதத்தில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருங்கள். அனைவரையும் அனுசரித்து வாழ முயற்சி செய்யுங்கள்.
கடகம் -
கடக ராசியினரே, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே நடக்கும் பிரச்னையை சமாளிக்க முடியும். நீங்கள் கொஞ்சம் உற்சாகத்தை உணர விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் சில நிதானமான, உற்சாகமான தருணத்தைச் செலவிடுங்கள். செலவுகளைக் குறையுங்கள். நல்ல நாளாக இருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசியினரே, தாயுடன் சிறிது பேச நேரம் ஒதுக்குங்கள். மேலும் அவரது ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். சிலரின் சாதாரண பேச்சுவார்த்தை கூட ஒரு உறுதியான உறவாக மாறும். உங்கள் துணைக்கு தனித்துவமான வழிகளில் காதலைக் காட்ட முயற்சி செய்யுங்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள்.
கன்னி - கன்னி ராசியினரே, நேர்மையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க நடவடிக்கை எடுங்கள். டீம் மீட்டிங்கின் போது கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பண வரவு, உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
பொறுப்புத்துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்