Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள்!

Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள்!

Marimuthu M HT Tamil
Feb 03, 2025 05:16 PM IST

Rasi palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினருக்கு பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள் குறித்து பார்ப்போம்.

Rasi palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள்!
Rasi palan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. பிப்.4ஆம் தேதிக்கான பலன்கள்!

நாளை பிப்ரவரி 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடலாம். மத நம்பிக்கைகளின்படி, அனுமனை வணங்குவது பயம், துக்கம் போன்றவற்றை நீக்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, பிப்ரவரி 4ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பிப்ரவரி 4ஆம் தேதி எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். அதன்படி, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி துலாம் ராசி முதல் மீனம் ராசியினருக்குப் பலன்கள் எவ்வாறு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி துலாம் முதல் மீனம் ராசியினருக்கான பலன்கள்:

துலாம்: பிப்ரவரி 4ஆம் தேதி துலாம் ராசியினருக்கு, அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இதன் மூலம், முதலாளியின் அதிருப்தியைத் தவிர்க்கலாம். பணத்தின் அடிப்படையில் இந்த நாள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிக வேலை அழுத்தத்தை எடுக்க வேண்டாம். பொறுமையாகப் பணியாற்றுங்கள்.

விருச்சிகம்: பிப்ரவரி 4ஆம் தேதி, பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த நாளாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் அலுவலகத்திலோ அல்லது வகுப்பறையிலோ புதிய ஈர்ப்பைப் பெறலாம். சண்டை சச்சரவில் பிரிந்து இருக்கும் விருச்சிக ராசியினர் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து அன்பாக செல்லவும். பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும். மன அழுத்தத்தைக் குறைக்கவும்.

தனுசு: பிப்ரவரி 4ஆம் தேதி, தனுசு ராசியினர் உங்கள் இலக்குகளை நெருங்கி வருவதைக் காண்பீர்கள். துன்பத்தைச் சமாளிக்கும் உங்கள் திறனில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் உடலின் தேவைகளில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்: 

பிப்ரவரி 4ஆம் தேதி நாள் மகர ராசியினர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அது காதல், தொழில், பணம் மற்றும் ஆரோக்கியம் எதுவாக இருந்தாலும், எதிர்பாராத வாய்ப்புகளுக்கு தயாராக இருங்கள். எல்லா மாற்றங்களையும் திறந்த இதயத்துடனும் மனதுடனும் அரவணைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: பிப்ரவரி 4ஆம் தேதி கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும்.  தொழிலில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோத வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வையுங்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் யோகா செய்யுங்கள். ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

மீனம்: பிப்ரவரி 4ஆம் தேதி மீன ராசிக்காரர்களுக்கு, மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காதல் விஷயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதனால் வாக்குவாதத்தைத் தவிர்த்து பிரச்னைகளில் இருந்து வெளிவருவதைத் தவிர்க்கவும். பொறுமையாகக் கையாளுங்கள். நட்புப் பாராட்டுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. 

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்