Horoscope Luck: பேராசை..பம்பர் லாட்டரி.. பிரமாண்டம்..எட்டாம் இடம் கொடுக்கும் ராஜாதி ராஜா யோகம்! - யாருக்கு வாய்க்கும்?
எட்டாம் இடம் மிகவும் நன்றாக இருக்கும் பொழுது நீங்கள் பாதுகாக்கும் ரகசியங்கள் உங்களுடன் இருக்கும். இல்லையென்றால் அது வெளிப்பட்டு விடும்
ஜாதகத்தில் எட்டாம் இடம் என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்பதை பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் வராஹி யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “எட்டாம் இடம் என்றாலே மிகப்பெரிய பொருளாதாரம் கிட்டும் என்று அர்த்தம். நம்முடைய சக்திக்கு மீறி அதிக பொருள் வரவு நமக்கு வர வேண்டும் என்றால், எட்டாம் இடம் சீறும் சிறப்புமாக இருக்க வேண்டும்.
இரண்டு,ஐந்து,எட்டு, பதினொன்று இந்த கிரகங்களோ பாவங்களோ ஒன்றிணையும் பொழுது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் கைக்கு பணம் வரும்.
நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு நம்முடைய எட்டாம் இடமானது நன்றாக இருக்க வேண்டும். எட்டாமிடம் என்ற உடன் நமக்கு சில நெகட்டிவான விஷயங்கள் நினைவுக்கு வரலாம். தசா புத்தி வரும் பொழுது, எந்தெந்த கிரகங்கள் இணைகிறதோ, அதன்படி அந்த பலன்கள் அமையும்.
எட்டாம் இடம் மிகவும் நன்றாக இருக்கும் பொழுது நீங்கள் பாதுகாக்கும் ரகசியங்கள் உங்களுடன் இருக்கும். இல்லையென்றால் அது வெளிப்பட்டு விடும்.
அதேபோல நாம் தவறான பாதையில் செல்வதற்கும் இந்த எட்டாம் இடம் வழிவகைச் செய்யும். நாம் தவறான வழியில் செல்லும் பொழுது, அதற்கு உறுதுணையாக இருந்து நம்மை சிறையில் தள்ளுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வழக்கு,வம்பு, ஜெயில் என பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன
யாருக்கெல்லாம் உங்கள் ஜாதகத்தில் ஐந்து மற்றும் எட்டாமிடம் தொடர்பில் இருக்கிறதோ, உங்கள் சக்திக்கு தகுந்தது போல் குழந்தை பிறந்ததற்கு பிறகு, உங்களுக்கு மிகப்பெரிய பணவரவு இருக்கும்.
இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது ஏழு மற்றும் எட்டாம் இடங்கள் தொடர்பில் இருந்தால் அந்த குழந்தை நிறைய பொருளாதாரத்தை கொண்டு வந்து விடும்.
எட்டாமிடம் வலுவுடையாமல் நீங்கள் ஒரு பெரிய உயரத்தை அடைய முடியாது. சக்திக்கு மீறிய கற்பனை, சக்திக்கு மீறிய கனவுகள், சக்திக்கு மீறிய பிரமாண்டம் என்று அனைத்துமே எட்டாம் இடம் தான்.
எட்டாமிடம் பலமாக இருந்தால் உங்களுக்கு பேராசை அதிகமாகிவிடும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்