வண்ணங்களை பூசு.. எண்ணங்களை மாற்று.. உங்கள் ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் இது தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வண்ணங்களை பூசு.. எண்ணங்களை மாற்று.. உங்கள் ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் இது தான்!

வண்ணங்களை பூசு.. எண்ணங்களை மாற்று.. உங்கள் ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் இது தான்!

Karthikeyan S HT Tamil
Dec 19, 2024 11:37 AM IST

ஜோதிட சாஸ்திரத்தின் படி, பிறக்கப்போகும் 2025 ஆம் ஆண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வண்ணங்களை பூசு.. எண்ணங்களை மாற்று.. உங்கள் ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் இது தான்!
வண்ணங்களை பூசு.. எண்ணங்களை மாற்று.. உங்கள் ராசிப்படி 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் இது தான்! (Freepik)

அந்த வகையில், பிறக்கப்போகும் 2025 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த கலரை அதிகம் பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும். நிறங்களின் அடிப்படையில் எந்தெந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கான நிறங்கள் இதோ..!

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சுறுசுறுப்பானவர்கள். 2025 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறமாக இருக்கப்போகிறது. அவை மேஷ ராசிக்காரர்களின் உற்சாகத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கும். இந்த நிறங்களை அதிகம் பயன்படுத்தினால் அதிர்ஷ்டமும், நன்மைகளும் கிடைக்கும். மேலும், இந்த வண்ணங்களை பயன்படுத்துவது அவர்களின் இயல்பான தலைமைத்துவ குணங்களுக்கு ஒரு தடையாக இருக்காது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் ஒரு நிலையான மற்றும் நட்பு இயல்பு கொண்டவர்கள். எனவே 2025 ஆம் ஆண்டில், அமைதியான பச்சை, இளஞ்சிவப்பு, பழுப்பு நிறங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த நிறங்களை அதிகம் பயன்படுத்தும் போது உங்கள் செயல்பாடுகளை நிலையானதாக வைத்திருக்க உதவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள். 2025 ஆம் ஆண்டில், வெளிர் நீலம், மஞ்சள் மற்றும் வெள்ளி நிறங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். அவை உரையாடல் மற்றும் தெளிவான சிந்தனையை ஊக்குவிக்கின்றன.

கடகம்

கடக ராசியினர் சந்திரனின் செல்வாக்கு காரணமாக உணர்ச்சிகள், உந்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கடக ராசிக்காரர்கள் வெள்ளி நிற ஆடை அணிவது அவர்களின் முயற்சிக்கு வெற்றியை பரிசாக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, படைப்பாற்றல், தலைமைப் பண்பு போன்ற குணங்களைக் கொண்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் தங்க நிறம் இருக்கும். இந்த வண்ணங்களை பயன்படுத்தும் போது உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக பகுப்பாய்வு, முறையான மற்றும் விவரங்களில் கவனம் செலுத்துபவர்களாக அறியப்படுகிறார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களுக்கு அடர் பச்சை நிறம் அதிர்ஷ்டமான நிறமாக இருக்கும். ஊதா நிறம் கன்னி ராசியை நிலையானதாகவும், வளப்படுத்துவதாகவும், முடிவெடுப்பதில் ஆதரவாகவும் இருக்க உதவுகின்றன.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner