Temple Special: உங்கள் வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றும் மங்கள சனீஸ்வரர்!-history of very ancient mangala saneeswarar temple - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Temple Special: உங்கள் வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றும் மங்கள சனீஸ்வரர்!

Temple Special: உங்கள் வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றும் மங்கள சனீஸ்வரர்!

Karthikeyan S HT Tamil
Aug 17, 2023 07:17 AM IST

Mangala Saneeswarar Temple: வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி சகல பலன்களை தரும் மங்கள சனி பகவானின் சிறப்புக்கள் பற்றி இங்கு காண்போம்.

மங்கள சனீஸ்வரர் கோவில்
மங்கள சனீஸ்வரர் கோவில்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில் உள்ள உயிரினங்கள் மறைந்து மீண்டும் தோன்றும். அப்படியொரு பிரளய காலத்தின் முடிவில் பூமியில், மீண்டும் உயிரினங்கள் தோன்றவும். மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்குளம் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வராக தோன்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

பிரளயம் முடிந்து மனித இனங்கள் தோன்றுவதற்கு முன்னரே, சனிபகவான் முதன் முதல் அமர்ந்த தலம் இது. பிருஹத் என்றால் பெரிதான என்று அர்த்தம். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்று பொருள்படும்படி ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்றும் மங்கள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அட்சயப் பாத்திரம் போல் அள்ள அள்ளக் குறையாமல் பொருளை தந்தருளும் இந்த ஆலயத்தில் அம்பாளின் திருநாமம் அபிவிருத்தி நாயகி. அதாவது, கணவருக்கு நிகராக இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் 'கருணைக் கடல்' என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

சனி தோஷம் தீர்த்து, சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி அருள்பவராக சனி பகவான் இங்கே எழுந்தருளியிருக்கிறார். வாழ்வில் ஒருமுறையேனும் விளங்குளம் கிராமம் வந்து, மங்கள சனீஸ்வரரைத் தரிசித்து சென்றால் வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி அருள்வார் சனி பகவான்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner