தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Uppur Veilugantha Vinayagar Aalayam

விநாயகர் சதுர்த்தி 2022: எப்பொழுதும் சூரிய ஒளி படும் விநாயகர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2022 08:35 PM IST

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

உப்பூர் வெயிலுகந்த விநாயகர்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர்

ட்ரெண்டிங் செய்திகள்

400 ஆண்டுகள் பழமை மாறா கோயிலான இக்கோயிலில் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் உப்பூர் வெயிலுக்கு உகந்த விநாயகர் ஆலயத்தில் யாகம் வளர்த்த ராமர், விநாயகருக்கும் சித்தி, புத்தி தேவியருக்கும் திருமணம் நடத்தி வைத்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே ஆண்டுதோறும் ஆவணி மாதம் இங்கு பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் நாள்தோறும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வடநாட்டில் நடப்பது போன்று தமிழகத்தில் விநாயக பெருமானுக்குச் சித்தி புத்தி இரு தேவிகளுடன் திருமணம் நடைபெறும் முதல் ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கின்றது.

திருவிழாவின் இறுதி நாளான சதுர்த்தி அன்று விநாயகர் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்குகின்றார். இதை முன்னிட்டு பக்தர்கள் காவடி மற்றும் தீமிதித்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

திருமண தோஷம், நினைத்த காரியம் நிறைவேறுதல், குடும்ப ஒற்றுமை, முன்னோர்கள் பகை உள்ளிட்ட பல்வேறு விதமான நேர்த்திகள் நிவர்த்தி ஆகுவதால் பொதுமக்களும், ஆன்மீக பக்தர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

WhatsApp channel