அருள்மிகு மாற்றுரைவரதீசுவரர் கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அருள்மிகு மாற்றுரைவரதீசுவரர் கோயில்!

அருள்மிகு மாற்றுரைவரதீசுவரர் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 20, 2022 05:41 PM IST

திருச்சி அருள்மிகு மாற்றுரைவரதீசுவரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

<p>மாற்றுரைவரதீசுவரர் கோயில்</p>
<p>மாற்றுரைவரதீசுவரர் கோயில்</p>

இக்கோயிலில் தலவிருட்சமாக வன்னி மரம் காணப்படுகிறது. இக்கோயிலின் தீர்த்தமாக அன்னமாம் பொய்கை தீர்த்தம் அமைந்துள்ளது. தன்னிடத்தில் வந்து முழுகுவோரின் பாவங்களைப் போக்கி தூய்மை செய்யும் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.

இக்கோயிலில் உள்ள நவகிரகங்கள் சூரியனை நோக்கி இருப்பது இத்தலத்தில் தனிச்சிறப்பு. தலமும் இருப்பிடமும் நீர்வளம், நிலவளம், செல்வவளம் நிறைந்த சோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும் தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்களில் 62வது சிவதலமாக விளங்குகிறது.

பாலாம்பிகை அம்மன் இரண்டாம் பிரகாரத்தின் பாலை கிழக்கு நோக்கி இருக்கும் அம்மன் இத்தலத்தில் மேற்கு நோக்கி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். தென்மேற்கு மூலையில் செல்வ விநாயகர் ஆலயமும் இரண்டாம் பிரகாரத்தின் வடகிழ் பகுதியில் யாகசாலை நெற்களஞ்சியத்தைக் காணலாம்.

முதல் ராஜகோபுரத்திற்கும் இரண்டாம் ராஜகோபுரத்திற்கும் இடைவெளி இன்றி பெரிய மண்டபம், பற்பல சிற்ப தூண்கள், கொடிமரம், பலிபீடமும், வடபால் நவகிரகங்களும், சகஸ்ர லிங்கமும் காட்சியளிக்கிறது. 

கற்ப கிரகத்தின் வெளித்தென்சுவரில் தக்ஷிணாமூர்த்தி, மேற்கு சுவரில் அர்த்தநாரீஸ்வரர், வடக்கு சுவரில் பிரம்மதேவரையும், கோமுகத்தையும் துர்கா தேவியையும் அதனை எடுத்து வடபகுதியில் சண்டிகேசுவரரையும் தரிசிக்கலாம்.

பொருளாதார வளம் பெற, குழந்தைகளுக்கான தோஷ நிவர்த்தி, திருமணத் தடை உள்ளவர்கள், கொடிய நோய் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து பரிகாரங்கள் செய்து வந்தால் அனைத்தும் தீர்ந்து சகல சந்தோசங்கள் கிடைக்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர்.

Whats_app_banner