மூடப்படாத குரு தட்சிணாமூர்த்தி சுவாமி சமாதி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மூடப்படாத குரு தட்சிணாமூர்த்தி சுவாமி சமாதி!

மூடப்படாத குரு தட்சிணாமூர்த்தி சுவாமி சமாதி!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Aug 13, 2022 09:31 PM IST

திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

<p>குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள்</p>
<p>குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள்</p>

இது போன்ற போட்டோக்கள்

இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் பெற்றுப் பல சித்து வேலைகளைப் புரிந்தார் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். வியாதிகளுடனும் விரக்தியுடன் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். 

நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் இறுதிக் காலத்தில் திருவாரூரை வந்தடைந்து மடப்புரம் பகுதியில் ஓடம் போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார்.

சித்தர்கள் ஜீவசமாதியில் ஆழ்ந்தும் இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதிபீடம் விளங்குகிறது. இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது.

மடாதிபதி மட்டும் தீயே உள்ளே இறங்கி பூஜை செய்து வருகிறார். குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி ஆன இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. 

ஆவணி மாத உத்திரத்தன்று நடைபெறும் குருபூஜை, நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பூஜை ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. பலிபீடம், நந்தி தேவர் பிரகாரம் காணப்படுகிறது.

Whats_app_banner