Mailam Murugan: பாலசித்தர் வேல் வாங்கும் முருகன்!
சூரபத்மனுக்கு வரமளித்த மயிலம் முருகன் கோயில் குறித்து இங்கே காண்போம்.
திண்டிவனம் மயிலம் பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ளது மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் தென்னிந்திய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில். மயிலத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நுழைந்த உடன் முதலில் முதற்கடவுளான விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதனை அடுத்து பாலசிந்தரின் சன்னதி அமைந்துள்ளது. பால சித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் சுப்பிரமணிய சுவாமி, ஒரு கையில் வேல் மற்றொரு கையில் சேவர் கொடியுடன் காட்சி அளிக்கின்றார்.
பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கி நேராகவோ காணப்படும். ஆனால் இக்கோயிலில் மட்டும் வடக்கு திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் தனிச்சிறப்பாக உள்ளது. முருகப் பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் பின்னர் மனம் திறந்து முருகனை நினைத்து தவம் புரிந்த போது காட்சி அளித்த முருக பெருமான் சூரபத்மன் கேட்ட வரத்தை அளித்தார்..
மேலும் எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார் என்றும் அப்போது உன் விருப்பம் நிறைவேறும் என்றும் கூறிவிட்டு மறைந்தார். அதுவரை மலையாக நிலை கொண்டு சூரபத்மன் அங்கு காத்திருந்ததாகவும் கோயில் வரலாறு கூறுகிறது.
பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில் பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம் பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூரசம்காரத்திற்கு புறப்படும் முருகர் பாலசித்தரிடம் இருந்து வேலாயுதத்தை பெற்று செல்கிறார்.
இந்த நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. முருகனுக்கு உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை மாலையாக தொடுத்து மூலவருக்கும். உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவித்த பின்னரே மற்ற பூமாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், சூரசம்காரம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, கிருத்திகை அம்மாவாசை, சஷ்டி மற்றும் பங்குனி உத்தர பெருவிழா நடைபெறுகின்றது பங்குனி உத்திரம் இங்கு 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமர்சையாக நடக்கிறது.