தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Thiruporur Kandaswamy Temple Can Be Found Here

HT Yatra: தோஷம் போக்கும் கந்தசுவாமி.. அபிஷேகம் இல்லாத சுயம்பு மூர்த்தி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 06:00 AM IST

திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்
திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் சிறப்பான கோயில்களில் ஒன்றாக விளங்க கூடியது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக் கூடிய முருக பெருமான் தானாக சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர்.

இவருக்கு பிரதான பூஜைகள் செய்வதற்காகவே சுப்ரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு இருக்கக்கூடிய முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது. அந்த யந்திரத்தில் முருகப்பெருமானின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் அது ஆமை பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

முருகப்பெருமானுக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகு இங்கு இருக்கக்கூடிய யந்திரத்திற்கு பூஜை நடத்தப்படுகிறது. சிவபெருமான் எப்படி வலது கையால் ஆசீர்வாதம் தருகின்றாரோ அதேபோல இந்த முருக பெருமான் அபய ஹஸ்தநிலையில் காட்சி கொடுக்கின்றார். மேலும் விஷ்ணு பகவானை போல இடது கையை தொடையில் வைத்துள்ளார். பிரம்மாவைப் போல அச்சரமாலை கண்டிகை உள்ளிட்டவற்றை வைத்துள்ளார் இதனால் இங்கு இருக்கக்கூடிய முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் அம்சமாக திகழ்ந்து வருகின்றார்.

தலத்தின் சிறப்புகள்

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு எதிரே வெள்ளை யானை வாகனமாக வைக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமான் இந்த கோயிலில் தனியாக காட்சி கொடுப்பார். வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

குறிப்பாக இந்த கோயிலில் கொடிமரமானது கோயில் கோபுரத்தின் வெளியே உள்ளது.

ஆறு முறை அழிவுற்ற நிலையில் தற்போது ஏழாவது முறையாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் நவகிரக சன்னதிகள் கிடையாது. சுயம்பு மூர்த்தியாக முருக பெருமான் இருக்கின்ற காரணத்தினால் இவருக்கு அபிஷேகம் கிடையாது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு இருக்கக்கூடிய யந்திர முருகனை வழிபட்டு வழிபட்டு சென்றான் யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தலத்தின் வரலாறு

 

அசுரர்களை அழிப்பதற்காக முருகப்பெருமான் மூன்று இடங்களில் போர் செய்தார். திருச்செந்தூரில் உள்ள கடலில் போர் செய்து மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தின் மீது போர் செய்த முருக பெருமான் கன்மத்தை அடக்கினார். வானவெளியில் போர் செய்து ஆணவத்தை அடக்கினார்.

இந்த திருக்கோயிலில் கந்த சுவாமி ஆக எழுந்தருளியுள்ளார் தாரகனோடு முருகப்பெருமான் போர் செய்ததால் இந்த இடத்திற்கு போரூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்த கோயில் மண்ணில் புதைந்து போனது. ஒரு பனை மரத்தடியின் கீழே முருகப்பெருமானின் சிலை இருந்துள்ளது.

முருகப்பெருமான் ஒரு முறை மதுரையில் வசித்து வந்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றி தான் புதையுண்ட கதை குறித்து கூறியுள்ளார். உடனே சிதம்பர சுவாமி முருகப்பெருமான் தெரிவித்த இடத்திற்கு வந்து அந்த சிலையை மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்துள்ளார். 

காட்டுப்பகுதியாக இருந்த அந்த இடத்தை சீர்திருத்தம் செய்து புதிய கோயில் ஒன்றை எழுப்பியுள்ளார். கந்த சுவாமியாக வீழ்ச்சி இருக்கக்கூடிய முருகப்பெருமானை போற்றி சிதம்பரம் சுவாமி 726 பாடல்களை பாடியுள்ளார். இதனை சிறப்பிப்பதற்காகவே இந்த திருக்கோயிலில் சிதம்பர சுவாமிக்கு சன்னதி அமைக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel