தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Thirupadagam Pandava Thoothar Perumal Temple

கிருஷ்ண ஜெயந்தி 2022: பாண்டவதூதப் பெருமாளின் சிறப்புகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2022 08:30 PM IST

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு குறித்து இங்கே காண்போம்.

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆகிறார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த திருக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் மூலவர் பாண்டவர் பெருமாள் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

கண்ணபிரான் பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது வாங்கி வரத் துரியோதனனின் சபைக்குச் சென்றபோது, துரியோதனன் கிருஷ்ணன் அமர்வதற்கு முங்கினாலான பொய்யாசனம் அமைத்து கிருஷ்ணனைக் கொலை செய்வதற்கு அடியில் மல்லர்களை ஆயுதபாணிகளாக வைத்திருந்தாராம்.

ஸ்ரீ கிருஷ்ணன் சிம்மாசனத்தில் அமரும்போது விஸ்வரூபம் எடுத்து மல்லர்களை அழித்ததாகவும், கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது போனதால் பாண்டவ தூதன் என்ற திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரோகிணி நட்சத்திர தினத்தில் ரோகிணி சக்கரத்தைக் கிருஷ்ணரின் திருவடிகளில் வைத்து ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு வருவதால் நட்சத்திர சகாய நல்வரங்கள் கட்டும் என்பது நம்பிக்கை. இங்கு ரோகிணி நட்சத்திர தீபம் ஏற்றி தூபம் சாந்தம் ஆகும் வரை ஆலயத்தில் அடிவரதட்ணமாக வலம் வர வேண்டும். 

பின்னர்தியானித்து கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய் கலந்து அடைபோன்ற வெண்ணெய் முறுக்கு, சீடை பச்சனங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வழிபட்டு வருகின்றனர். கோயிலில் ருக்மணி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், கருடன் என அனைவரும் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருளுகின்றனர்.

WhatsApp channel