Tamil News  /  Astrology  /  History Of Srimushnam Sri Bhuvaraha Swamy Temple

Bhuvaraha Swamy: புற்றுநோய் தீர்த்த பூவராக பெருமாள்!

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்

நவாப்பிற்கு புற்றுநோய் தீர்த்த பூவராக பெருமாளின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில் மூன்றாம் அவதார தலமாகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஓம் நமோ நாராயணா என்ற எழுத்துக்களுக்கு ஏற்ப வட இந்தியாவில் நான்கும் தென்னிந்தியாவில் நான்கு இடங்களில் சுயமாக எம்பெருமாள் தோன்றியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுயம்பு தலமாக இத்தலம் விளங்கி வருகின்றது.

சாலிகிராம ரூபத்தில் உலகில் பன்றி முகம் கொண்டு மனித உடலுடன் பெருமாள் இவ்விடம் தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். நவாப் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்டார். அப்பொழுது பூவராகரை ஜெபித்ததால் பன்றி ரூபத்தில் வந்து நவாப் இடுப்பிற்கு மேல் பகுதியில் கோரை பற்களால் பிராண்டியதால் புற்றுநோய் கட்டி வெளியே வந்து விழுந்து உயிர் பிழைத்தாராம்.

மகாமகத்தன்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து 150 கிலோமீட்டர் அப்பால் உள்ள சிதம்பரம் கிளையின் உள்ள தர்காவிற்கு சென்று இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அவ்விடம் பூஜை செய்து வழிபடுகின்றனர். வேண்டுகோளை ஏற்று பூவராக சுவாமி நவாப் புதைக்கப்பட்ட மசூதியிலும் மக்களை ஆசிர்வதிப்பதாக கூற்று.

இவ்விடம் இஸ்லாமியர்கள் பெருமாளை வணங்குவது குறிப்பிடத்தக்கது. உலகத்திலேயே வைணவ கோயிலான இக்கோயிலில் தான் சைவம் மற்றும் மருத்துவ முறையில் பூஜைகள் செய்யப்பட்ட வருகின்றது. இக்கோயிலுக்கு வருபவர்கள் 100 கால் மண்டபத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பின்னரே பூவராக சுவாமி வணங்க வேண்டுமாம்.

இக்கோயிலின் தீர்த்தம் நித்திய புஷ்கரணியாகும். மேலும் இந்து முஸ்லிம் வழிபடுவதற்கான ஆதாரமும் உள்ளது. நம்மாழ்வார், சப்த கன்னிமார்கள், திருக்கச்சி நம்பி, திருப்பதி வெங்கடாச்சலபதியின் பாதம், பலி பீடம், துளசி மாடம் ஆகியவை காணப்படுகின்றது. இக்கோயிலில் உள்ள எம்பெருமானை தரிசிப்பதால் 108 திவ்யதேசங்களை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.