தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Sri Malayanur Angala Parameswari Temple

பார்வதி வரம் பெற்ற தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2022 06:55 PM IST

உலகப் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

ட்ரெண்டிங் செய்திகள்

தாங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் இரவு முழுவதும் இந்த கோயிலில் தங்குவது வழக்கம். அங்காளம்மன் ஆலயம் வருகை தரையில் வீற்றிருக்கும் பெரியாயி அம்மனிடம் சென்று வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்பது மக்களின் நம்பிக்கை.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உற்சவ நாட்களில் அம்மன் போற்று வேடமிட்டு பக்தர்கள் வருவது வழக்கமான ஒன்று கிட்சக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி எனச் சக்திகளைக் கொண்டு சடை முடிவுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர்ந்த இடம் தான் மேல்மலையனூர் எனத் தல வரலாறு கூறுகிறது.

சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பார்வதி தேவியைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டதற்கு, தங்கள் அங்கத்தில் இடம்பாக தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி சிவபெருமான் தன்னுடைய இடபாகத்தை தந்ததினால் அங்கமாலும் சக்தியாக உருவெடுத்ததை அங்கால பரமேஸ்வரி என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் அம்மனுக்குப் பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றைப் பலியிட்டுப் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் மாசி அமாவாசை அன்று அகோர கோலத்துடன் சுடுகாட்டுக்குச் செல்ல மாங்காளிக்கு பக்தர்கள் தேங்காயில் நெய் நிரப்பி தீபாரதனை காட்டுவது விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

WhatsApp channel