Kailasanathar Temple: ஆற்றின் நடுவே அருள்பாலிக்கும் கைலாசநாதர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kailasanathar Temple: ஆற்றின் நடுவே அருள்பாலிக்கும் கைலாசநாதர்!

Kailasanathar Temple: ஆற்றின் நடுவே அருள்பாலிக்கும் கைலாசநாதர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 26, 2022 01:38 PM IST

பாலாற்றின் நடுவே பரமேஸ்வர பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் கோயில் குறித்து இங்கே காண்போம்.

கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் கோயில்
கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் கோயில்

பூலோகத்தை கண்டு ரசிக்க வந்த ஈசன், நத்தம் என்ற ஊரில் குடிபெயர்ந்ததாக கூறப்படும் நிலையில் அப்பொழுது பாலாற்றி நடுவே உள்ள ஒரு மலைத்திட்டில் அமர்ந்து தவத்தில் திளைத்த போது அவரது ஆனந்த தவத்தினை காண வருண பகவான் ஆனந்த மழை பொழிந்ததாகவும் மழையில் நனைத்தபடியே தவம் செய்து கொண்டிருந்த ஈசனை கண்ட ஒரு பசுமாடு அவர் மீது மழை சாரல் படாதபடி அருகில் வந்து நின்றதாம்.

அதை கண்டு ராஜநாகம் ஒன்று இருவர் மீதும் மழை துளிகள் விழாதவாறு பெரிய படம் எடுத்து குடை போல் காத்து நின்றதாம். தவத்தில் இருந்து எழுந்த ஈசன் இதனை கண்டு மனம் மகிழ்ந்து பசுவிற்கும் நாகத்திற்கும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, இத்தலத்தில் தங்கி தங்களை நாடி வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை எடுத்து அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஈசனும் மணமகிழ்ந்து வரம் அளித்துள்ளார்.

லிங்க ரூபத்தில் தாங்கி கையிலாயத்தில் இருந்து வந்தமையால் கைலாசநாதர் என்ற பெயரில் இத்தலத்திலேயே குடி கொண்டதாக தல வரலாறு கூறுகின்றது. இத்தலத்தில் கம்பீரமான பெரிய திருமேனி கொண்டு 5 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் பெருமானுக்கு இடப்பக்கமாக தாயார் கனகாம்பிகை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரும் அருளி வருகின்றார்.

இவ்வாலயத்தில் உள்ள விநாயகர் வேறெங்கும் காண்பதற்கு அரிதான திரு உருவில் அதிசயமான வடிவம் கொண்டு திகழ்கின்றார். நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சகலதோஷங்களையும் நீக்கும் தக்ஷிணாமூர்த்தியும் காட்சி அளித்து வருகின்றனர் .

பங்குனி உத்திர திருவிழாவில் இத்தலம் வந்து தரிசனம் செய்தால் திருமண தடைகள் விலகும் என்றும், நல்லதொரு வாழ்க்கை கைகூடும் என்பதும் ஐதீகம். சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக இத்தலம் விளங்கி வருகின்றது. தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. நீருக்கு மேல் உள்ள தக்ஷிணாமூர்த்தியை வணங்குவதால் அனைத்து தோஷங்களும் நீங்கி குருவின் பார்வை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

சிவராத்திரியில் நான்கு கால பூஜைகளும், பிரதோஷ வழிபாடுகள், அன்னாபிஷேகம், ஆருத்ர தரிசனம், ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், சோம வாரம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் இவ்விடம் நடைபெறுகின்றது.

Whats_app_banner