தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Munchirai Shri Thirumala Mahadevan Temple

சைவ, வைணவ ஒற்றுமை கூறும் திருமலை மகாதேவர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2022 07:09 PM IST

முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில்
முஞ்சிரை திருமலை மகாதேவர் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

பண்டைய காலத்தில் சீதையை ராவணன் முதலில் சிறை வைத்ததும் இந்த இடம் என்றும், இத்தலத்தில் ராமர் வழிபட்டார் என்றும் கூறப்படுகிறது. இக்கோயிலின் வளாகத்தில் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விஷ்ணு கோயிலும் அமைத்துள்ளது.

பதினோராம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் கலைநயமிக்க சிற்பங்களும் கல் தூண்களும் கோயிலின் உள்பகுதியில் மரத்தாலான கலை வேலைப்பாடுகள் நிறைந்த நவகிரக மண்டபமும் காணப்படுகின்றது.

இங்கு மூலவராக மகாதேவரும், அடுத்தபடியாக திருமலை மகாவிஷ்ணுவும் கணபதி, சாஸ்தா, நாகராஜா போன்ற விக்ரகங்களும் உள்ளன. இங்குக் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலின் விழுப்புரம் ஒன்றும் அதனைச் சுற்றி மூன்று குளங்கள் எனக் கோயிலைச் சுற்றி நான்கு குளங்கள் காணப்படுகின்றன.

பிரதோஷ நாட்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. அதிலும் ஒரே நேரத்தில் மகாதேவருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இரு கோயில்களிலும் கொடியேற்று விழா நடப்பது சிறப்புடைய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இக்கோயிலுக்குத் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள மாநில பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

WhatsApp channel