துர்கா பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது?..தோற்றமும், முக்கியத்துவமும் பற்றி தெரியுமா? - முழு விபரம் இதோ!
துர்கா பூஜை தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. துர்கா பூஜை திருவிழாவின் முக்கிய தேதிகள் மற்றும் பிற முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம் .

இந்தியாவின் மிகவும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்து பஞ்சாங்கத்தின்படி புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். நவராத்திரியின் ஒன்பது நாட்கள் அன்னை துர்கா வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நவராத்திரியின் போது துர்கா பூஜைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 12:36 PMராகு கேது பலன்கள்: ராகு கேது பணக்கார யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கா?
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
துர்கா பூஜையின் கொண்டாட்டம் நவராத்திரியின் ஆறாவது நாளில் தொடங்கி தசமி திதியில் அதாவது விஜயதசமியில் முடிவடைகிறது. இந்த ஆண்டு, துர்கா பூஜை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி முடிவடைகிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்த பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. துர்கா பூஜை திருவிழாவின் முக்கிய தேதிகள் மற்றும் பிற முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம் ...
துர்கா பூஜையின் முக்கிய தேதிகள்
நவராத்திரி சஷ்டி திதி (8 அக்டோபர் 2024)- வில்வா அழைப்பிதழ்
நவராத்திரி சப்தமி திதி (9 அக்டோபர் 2024)-கல்பரம்பா, அகல் போதன்
நவராத்திரி அஷ்டமி திதி (10 அக்டோபர் 2024)- நவபத்ரிகா பூஜை, கொலாபாவ் பூஜா
நவராத்திரியின் நவமி திதி (11 அக்டோபர் 2024)- துர்கா அஷ்டமி, சந்தி பூஜை, மகாநவவாமி
நவராத்திரியின் தசமி திதி (12 அக்டோபர் 2024) -நவமி ஹவன், விஜயதசமி
13 அக்டோபர் 2024- சிந்தூர் உத்சவ்
துர்கா பூஜையின் வரலாறு:
புராணங்களின்படி, மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் கடினமான தவம் செய்து சிரஞ்சீவியலாகும் வரத்திற்காக கேட்கிறார். மகிஷாசுரனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, அவருக்கு அமரத்துவம் பெறுவதற்கான வரத்தை வழங்கினார். இதற்குப் பிறகு, படிப்படியாக மகிஷாசுரனின் கொடுங்கோன்மை தெய்வீக உலகில் அதிகரிக்கத் தொடங்கியது. மகிஷாசுரனுடனான போரில் அனைத்து தேவர்களும் தேவியர்களும் தோற்கடிக்கப்பட்டனர். இதனால், அனைத்து தேவர்களும், தேவதைகளும் வருத்தமடையத் தொடங்கினர்.
சகல சக்திகளையும் ஒன்றிணைத்த அந்த தேவியால் மட்டுமே அவனை வெற்றிகொள்ள முடியும் என்பதால் அவள் தலைமையில் தேவர்கள் அவனை எதிர்கொண்டனர். மகிஷாசுரனின் கொடுங்கோன்மையைக் குறைக்குமாறு துர்கா தேவியிடம் கேட்டுக்கொண்டனர். பகவதி தேவியுடன் மகிஷாசுரன் அரக்கன் ஒன்பது நாட்கள் போரைத் தொடர்ந்தான், பத்தாவது நாளில், துர்கா அன்னை மகிஷாசுரனைக் கொன்றாள். அதனால்தான் பத்தாம் நாள் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது.
ராமரே ராவணன் மீது போர் தொடுக்குமுன் சக்தியை வழிபட்டதாக புராணங்கள் சொல்லுகிறது. அதன் படி முதன் முதலில் ராமர்தான் 108 நீலநிறத் தாமரைகளை சமர்ப்பித்து 108 விளக்குகளை ஏற்றி மகிஷாசுர மர்த்தினியை வணங்கினார் என்பது ஐதீகம். வரலாற்றுக் கூற்றுக்கள் படி பார்த்தால் வங்காளத்தில் 16ஆம் நூற்றாண்டு முதலே இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய காலங்களில் கூட கொண்டாடப் பட்டிருந்தாலும் 16 ஆம் நூற்றாண்டு முதல் தான் முழுவடிவம் பெற்றது என்று கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்