Raja Swamy Temple: தானே தலையில் வெட்டிக்கொண்ட ராசா!
பகைவர் கையில் சிக்காமல் இருக்க ராசா தானே தலையில் வெட்டி வீர மரணம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ளது ராஜா சுவாமி திருக்கோயில். ராசா சுவாமி, நல்ல மங்கை அம்மன், உச்சன்னன், சார்கணன் என இக்கோயிலில் மூன்று கருவறைகள் உள்ளன. வலப்புற கருவறையில் உச்சகுமாரன் இடப்புற கருவறையில் பெரியண்ணன், வெளியே கிழக்கு நோக்கி வீரர் ஒருவரின் உருவமும் அம்மனின் உருவமும் உள்ளது.
அம்மனை துவரடி அம்மன் என அழைக்கின்றனர். இதற்கு சற்று முன்புறம் தெற்கு நோக்கி கோயில் அன்னன், கோயில் ஆத்தாள் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். கிழக்கு நோக்கி வலம்புரி விநாயகர் சப்த கன்னிமார்கள் உள்ளன.
பிரகாரத்தின் வடகிழக்கில் மசரி அம்மன் கோயிலும் காணப்படுகின்றது. எல்லா தூண்களிலும் அடியார்களின் சிற்பங்களும் ஆடவர் பெண்ணியரின் சிற்பங்களும் சைவ, வைணவ சிற்பங்களும் காணப்படுகின்றன. மூன்று தொகுதியாக 21 கன்னிமார்கள் காணப்படுகின்றன.
கோயில் முகப்பு வாயில் தீபத்தமும் உள்ளது. வெளி வாயிலின் வலப்புறம் மேற்கு நோக்கி வீர சாம்புவின் சிலை உள்ளது. கருப்பண்ண சுவாமிக்கும் இவ்விடம் தனி சன்னதி காணப்படுகின்றது. ராசாவின் ஆட்சியில் பருவமழை தவறாமல் பெய்து வந்தது, விவசாயமும் செழித்து விளங்கியது. இயற்கை, விலங்கு, பகைவரால் எவ்வித துன்பமும் இன்றி மக்களோ மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர், பொருட்களும் குவிந்தன.
விளைச்சல் அமோகமாக இருந்து வந்த நிலையில் நாட்டில் புகுந்து பொருட்களை சூறையாடினர். தீயவர்களை அழிக்கும் பொருட்டு வெற்றி பல கண்டவர் இறுதியில் பகைவர் கையில் சிக்காமல் இருக்க தம்மை தானே தலையில் வெட்டி வீர மரணம் அடைந்தார்.
ராசாவின் மனைவி ராசாத்தாள் அம்மையார் தீப்பாய்ந்து உயிரிழந்தார் என கோயில் வரலாறு கூறுகின்றது. முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த கோயிலாக இக்கோயில் விளங்கி வருகின்றது.