பழமை வாய்ந்த வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்
குழந்தை பாக்கியம் தரும் வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்
நெல்லை மாவட்டத்தின் எல்லையில் அமைந்த அழகான ஊர் மதுரையிலிருந்து தென்காசி செல்லும் வழியில் சிவகிரி வட்டத்தில் அமைந்துள்ளது இந்த வாசுதேவ நல்லூர். பிரம்மாண்டமான மதில் சுவர்களுடன் இந்த சிந்தாமணி நாதர் கோயில் மிகவும் சிறப்பாகும்.
ஆனால் இந்த கோயிலின் சிறப்பு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் பெயரால் விளங்குகிறது. உள்ளே கணபதி, ஆறுமுருகப்பெருமான், நவகிரகங்கள் என அனைத்து சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தர்ம சாஸ்தா எனும் பெயர் கொண்ட ஐயன் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் அழகாகக் காட்சி தருகிறார். தல விருட்சத்தின் அடியில் நாகர்களின் பிரதிஷ்டையை உள்ளது.
அடுத்து பைரவர், கையில் உடுக்கையும் பாசமும் தாங்கி சூலம் கொண்டு நீண்ட நெடிதுயர்ந்த வடிவத்தை வெளிப்படுத்துகிறார். மஞ்சள் நிறம் முழுதாய் தெரிய அம்பிகையும் மணிவாசகரும் உடன் திகழ பெருமானின் திருநடனத்தைக் காட்சியைக் காட்டும் சபை உள்ளது.
இக்கோயிலின் மூலவர் அர்த்தநாரீஸ்வரர் பெருமான். இந்த கோயில் சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டது பழமையான என்கிறார்கள். இங்கே மூலவர் அர்த்தநாரீஸ்வரர் ஆகவே காட்சி தருகிறார்.
சிவமும், சக்தியும் வேறுவேறு அல்ல என்று காட்டிய பரமன் கோயில் என்பதால், தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து இருக்கும் தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரை வேண்டி வணங்கினால் மீண்டும் அன்பான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
அதற்காகவே இங்கே பலர் வந்து வழிபடுகிறார்கள். இங்கே கருவரை மேற்கூரை சந்தன மரக் கட்டைகளால் கட்டப் பட்டுள்ளது என்பதும் இக்கோயிலின் சிறப்பம்சம். இந்த தலத்தின் அம்பிகைக்கு இடபாகவல்லி என்று பெயர்.
பாண்டியர் காலத்துக் கோயில் இது. மன்னன் ரவிவர்மனுடைய மகன் குணசேகரன், ஒருமுறை தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டால் அவனுக்குச் சிவனடியார் ஒருவர் இத்தலத்தின் அர்த்தநாரீஸ்வரரை வேண்டினால் குணமாகும் என்றார்.
அதன்படி இங்கு வந்து தலத்தில் இறைவனை வழங்கியதும் வயிற்று வலி தீர்ந்து போனதால், ஆனந்தமடைந்த குலசேகரன் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டினார்.
ஆனி மாத பிரம்மோற்சவத்தில் சிவனை மட்டுமே பிருங்கிய முனிவர் வழிபடுவது போலவும், பின்னர் பார்வதி கோபமடைந்து விரிவது போலவும், அதன் பின்னர் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருவதும் என விழா நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு எதிரில் உள்ள கருப்பா நதியில் நீராடினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கின்றனர். அம்மனை வணங்கினால் கரு உருவாகும் என்பதால் இது கருப்பையாறு என்றே அழைக்கப்பட்டது. பின்னாளில் கருப்பாநதி என்று ஆனது எனக் கூறப்படுகிறது.