தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Thiruvallur Thirumoola Nathar Swamy Temple

பல்லவர் கால அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2022 07:11 PM IST

அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்

திருமூலநாதர் சுவாமி கோயில்
திருமூலநாதர் சுவாமி கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறப்புமிக்க இந்த ஆலயம் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இவ்வூர் புழல் கோட்டத்தில் ராஜசுந்தரி நல்லூர் எனப் பெயர் பெற்றுச் சிறப்பும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலின் தல மரமாக வில்வம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கு அந்த ராசிக்குரிய மரங்கள் வைத்து பூஜிக்கப்படும் தலமாகக் கோயில் விளங்குகின்றது. கோவிலின் உள்பிரகாரத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை முருகனுடனும், துர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன.

வெளிப்பகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதி, சர்வேஸ்வரர் பிரித்திங்கரா தேவி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. பழங்கால கல்வெட்டுகளுடன் கூடிய அழகிய சிற்பங்களைக் கொண்ட மண்டப தூண்கள் இக்கோயிலின் சிறப்பாகும்.

இந்த கோயிலில் உள்ள ஈசனின் சிறப்பினை நாளாறு கூட்டத்தில் நாயகனே என்று பெருந்தேவரார் பாடியுள்ள பாடல் மூலம் அறியப்படுகின்றது. ஓராண்டுக்கு ஆறு கால நடராஜர் பூஜைகளும், ஆடிப்பூர விழா, ஆவணித் திருவிழா மற்றும் 64 மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் விமர்சையாக நடத்தப்படுகிறது.

தைப்பூச பிரம்மோற்சவ திருவிழா, திருக்கல்யாணம் இக்கோவிலில் விசேஷமாக இருக்கும். பிரித்தியங்கிரா யாகம், சர்வேஸ்வரர் யாகங்கள் என ஞாயிறு தோறும் இங்கு நடைபெறுகின்றன. தொழில் விருத்தி அடைய இக்கோயிலில் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சென்னை புழலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு திருமூலநாதர் சுவாமி திருக்கோயிலை அடையலாம்.

WhatsApp channel