Vaidyanathaswami Temple: காய்ச்சலைப் போக்கும் வைத்தியநாதர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vaidyanathaswami Temple: காய்ச்சலைப் போக்கும் வைத்தியநாதர்!

Vaidyanathaswami Temple: காய்ச்சலைப் போக்கும் வைத்தியநாதர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Dec 20, 2022 05:04 PM IST

திருமகளான லட்சுமிக்கு முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட சரும நோயை தீர்த்த லட்சுமி தீர்த்தம் உள்ளது.

வைத்தியநாதர் கோயில்
வைத்தியநாதர் கோயில்

இது போன்ற போட்டோக்கள்

மார்க்கண்டேயர், திருமால், லட்சுமி, துர்க்கை, காளி, சூரியன், சந்திரன், அக்னி, அஸ்வினி தேவர், தேவர்கள், அகத்தியர், பராசரர், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. சாபத்தால் சந்திரனுக்கு ஏற்பட்ட நோயை போக்கியவர் வைத்தியநாதன். விஷ்வாமிர்த முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல லிங்கத்தை பிரம்மன் பெயர் எடுக்க முயன்ற போது வைரத் தூணாக விளங்கியதால் வைரத்தூண் நாதர் என அழைக்கப்படுகிறார்.

மார்க்கண்டேய முனிவருக்கு வைகாசி விசாக நாளில் சிவபெருமான் வடிவுடை மகிழ்ந்து காட்சி கொடுத்து ஆடினார். கோயிலில் நவகிரகங்கள் இல்லை. அதற்கு பதிலாக சுவாமி சன்னதியில் மூன்று குழிகள் உள்ளன. ஸ்ரீ சக்கரவர்த்தி நவகிரக தோஷங்கள் நீங்கிய இடம். சுந்தரமூர்த்தி நாயனாரின் கனவில் தோன்றி மழவாடிக்கு வர மறந்தாயோ என்று நினைவூட்டி உன்னார் மேனியனே என்ற பதிகம் பெற்ற தலம்.

தல விருட்சமாக பனைமரம் விளங்குகிறது. சிவன் கோயில்களில் புழுங்கல் அரிசிகள் நெய்வேத்தியம் செய்வது இங்கு மட்டுமே. காய்ச்சல் நிற்காத நிலையில் புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் செய்து படைத்தால் நோய் குணமடையும்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறை புனர்பூசம் கூடிய நன்னாளில் சிலாத முனிவரின் மகனாக வளர்ந்து வந்த நந்திகேஸ்வரருக்கும், வசிஷ்ட முனிவர் அருந்ததியின் மகளான ஊர்மலாதேவிக்கும் திருமண விழா நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் பெற்றால் அடுத்த ஆண்டுக்குள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தடை நீங்கி மன வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

அம்மனுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதியின் எதிரியை திருமகளான லட்சுமிக்கு ஒரு முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட சரும நோயை தீர்த்த லட்சுமி தீர்த்தம் உள்ளது. புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாற்றுக்கு வடமேற்கு 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த திருமழபாடி உள்ளது.