Vaiyappamalai Murugan Temple: பொற் குன்றை தூக்கிச் சென்ற முருகன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vaiyappamalai Murugan Temple: பொற் குன்றை தூக்கிச் சென்ற முருகன்!

Vaiyappamalai Murugan Temple: பொற் குன்றை தூக்கிச் சென்ற முருகன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 26, 2022 08:11 PM IST

நாமக்கல் வையப்பமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

சுப்பிரமணிய சுவாமி கோயில்
சுப்பிரமணிய சுவாமி கோயில்

தல வரலாறு

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தனது தாய் தந்தையுடன் ஏற்பட்ட ஊடல் தீர்ந்த நிலையில், சித்தர்கள் மறியெல்லாம் பொன்னின்பால் சென்றதால் அவர்களை தடுத்து திருவிளையாடல் புரிய விரும்பினார். பழனி பாலகன், சித்தர் மலையை அடைந்து அந்த பொற் குன்றை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

அதனை கண்டு சித்தர்கள் அவர் யாரென்று தெரியாமலேயே வைப்பெண்ணை, வைப் பொண்ணை என்று கூவிக்கொண்டே துரத்தியுள்ளனர். தற்போதுள்ள இவ்விடத்திற்கு வந்ததும் அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஒளவையார் முருகனைக் கண்டு ஆனந்த முறை நிலையில் வைக பொன்மலையை என்ற கூறினார். உடனே அதனை அங்கே வைத்த முருகன் அனைவருக்கும் காட்சி கொடுத்தார்.

தல சிறப்புகள்

அது முதல் வைகை பொன்மலை என்றும் வைக பொன்மலை என்றும் பல பெயர்களில் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது வையப்பமலை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1000 அடிக்கு மேல் அமைந்திருக்கும் சுமார் 240 படிகள் கொண்ட இத்தலத்தில் முதலில் விநாயகர் கோயில், சில படிகளை கடந்து சென்றால் வலது புறம் படிக்கட்டு அருகே சின்ன பழனி என்று அழைக்கப்படும் திருத்தலத்தின் வரலாறு கோயிலும் உள்ளது.

கோயிலின் உச்சிக்கு சென்றவுடன் மயில்வாகனம் அருகே மிகப்பெரிய கொடி கம்பம் எதிரே கையில் வேலுடன் ஸ்ரீ சுப்பிரமணியன் சுவாமி காட்சி அளிக்கின்றார். இதனை எடுத்து கோயிலை சுற்றி வளம் வந்தால் ஸ்ரீ குகன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பால தண்டாயுதபாணி, ஸ்ரீ நயிரு விநாயகர், நவக்கிரகங்கள் கொடிக்கம்பத்தின் அருகே இடது புறம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்பாள் காட்சி அளிக்கின்றனர்.

இதன் அருகே அப்பர், சுந்தர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர். இங்கு செவ்வாய்க்கிழமை, கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Whats_app_banner