Madhurakaliamman Temple: செல்லியம்மனை காப்பாற்றிய மதுரகாளியம்மன்!
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுவாச்சூர். இந்த ஊரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரை காளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள அம்மனை வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் தரிசித்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி மனம் அமைதி அடையும் என்பது ஐதீகம்.
ட்ரெண்டிங் செய்திகள்
கற்புடைய தெய்வமான கண்ணகி தன் கணவன் கோவலனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் தாங்காமல் கோபம் கொண்டு மதுரை எரித்தபின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இந்த தலத்தை வந்தடைந்து அமைத்துக் கொண்டால் என்று கூறுகிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.
மேலும் இந்த தலத்தில் ஆதிசங்கரர் வந்து வழிபட்டதாகும் கூறப்படுகிறது. சிறுவாச்சூர் மக்களின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன். முன்பு ஒரு முறை மந்திரவாதி ஒருவர் தனது மந்திர வலிமையால் செல்லியம்மனை கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்த தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அன்னை மதுரகாளியம்மன் வந்து செல்லியம்மன் உடன் இரவு தங்க இடம் கேட்டுள்ளார்.
அப்போது தன்னை மந்திர வலிமையால் தொல்லை படுத்தும் மந்திரவாதி குறித்து செல்லியம்மன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு மதுரை காளியம்மன் அந்த மந்திரவாதியை சண்டையிட்டு அழித்தாள். இந்த உதவியால் மனம் குளிர்ந்த செல்லியம்மன் மதுரகாளியம்மனை சிறுவாச்சூர் ஆலயத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று கூறி அருகில் உள்ள பெரியசாமி மலைக்குச் சென்றுவிட்டர் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
சிறுவாச்சூர் ஆலயத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திறந்து வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. கோயிலின் முக்கிய தினங்களிலும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களிலும் காலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
தினம்தோறும் மதியம் 1:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நாட்களில் மதுரை காளியம்மன் கோவிலில் அருகே உள்ள பெரியசாமி மலையில் அருள்பாலித்து வரும் செல்லியம்மன் தங்கும் அதிகம் உள்ளது.
மதுரை காளியம்மன் என்று திருப்பெயரே பின்னாலில் மருவி மதுரகாளியம்மன் என்று பெயர் பெற்றதாகும் கூறப்படுகிறது. எப்போதும் பூஜையின் போது செல்லியம்மன் வசிக்கும் பெரியசாமி மலையை நோக்கி தீபாராதனை முதலில் காட்டிவிட்டு மதுரகாளியம்மனுக்கு தீபாரதனை காட்டும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அம்மன் ஆலயத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரையில் அமாவாசைக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று பூச்செரிதலுடன் திருவிழாவானது தொடங்கும். 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.