தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Ramanathapuram Sri Rethineshwarar Temple

குடும்பத்தில் நிம்மதி தரும் ஸ்ரீ ரெத்தினேஸ்வரர் திருக்கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2022 07:05 PM IST

ராமநாதபுரம் ஸ்ரீ ரெத்தினேஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

ரெத்தினேஸ்வரர் திருக்கோயில்
ரெத்தினேஸ்வரர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோயில் மூலவராக ஆதி ரெத்தினேஸ்வரர் என்று அழைக்கக்கூடிய மகா சிவனும் சௌபாக்கிய நாயகி சமேத ஆதி ரத்தினஸ்வரராக காட்சியளிக்கிறார்கள்.

ரெத்தினேஸ்வரருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தயிர், விபூதி, எண்ணை உள்ளிட்ட 13 வகைகளான அபிஷேக் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அமைதியான இயற்கை சூழலுடன் குடும்பத்தோடு இறைவழிபாடு நடத்த உகந்த இடமாக இந்த ஆலயம் சிறந்து விளக்குகிறது.

ஆலயத்தின் முகப்பில் உள்ள தெப்பக்குளத்தில் மிகப்பெரிய அளவில் நந்தி மேடை அமைக்கப்பட்டு ஆன்மீக பக்தர்களுக்கு வரம் அளிக்கும் இடமாகத் திகழ்ந்து வருகிறது. மேற்கு படித்துறைகள் பழமையான மலைக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டு 1901 ஆம் ஆண்டு சுவாமி அம்பாள் பிரதிஷ்டையும், 1907ஆம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன், கன்னிமூலை கணபதி, ஐயப்பன், முருகன் என 32 பரிவாரம் தெய்வங்கள் பக்தர்களுக்கு இந்த ஆலயத்திற்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த கோயிலில் ஏராளமானவர்கள் திருமணத் தடை நீங்குதல், குழந்தை வரும் வேண்டுதல், குடும்பத்தில் நிம்மதி வேண்டுதல், கல்வி வரம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்காகத் தினந்தோறும் குவிந்து வருகின்றனர்.

இந்த கோயில் காலை ஆறு மணி முதல் 12 மணி வரை ஆலயம் திறந்திருக்கும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வழிபாடு செய்யலாம்

WhatsApp channel