தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Puducherry Sri Angala Parameswari Temple

வியாபாரத் தடை நீக்கும் அங்காள பரமேஸ்வரி!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2022 02:04 PM IST

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில்
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோயிலில் விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், பாவாடைராயன், அன்னபூரணி அம்மன், துர்க்கை அம்மன், ஐயப்பன், மாரியம்மன், சனீஸ்வரன் கொல்கத்தா காளி, ஈஸ்வரன் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அங்காளம்மன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, பாவாடைராயன் தன் குடலையே பிடுங்கி எடுத்து வாழை இலையில் வைத்து அம்மனுக்குப் படையில் போடுவது போன்ற வகையில் காட்சி தருகின்றனர். மேல்மலையனூருக்கு அடுத்து இக்கோயில் வட திசை நோக்கிக் காணப்படுகிறது.

கொல்கத்தா காளியும் வேறு எந்த கோயிலிலும் கிடையாது. அங்காளம்மனை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம், தாலி பாக்கியம் கிடைக்கும் என்றும், பில்லி, சூனியம், வியாபார தடை, தீராத நோய்கள் போன்றவை வாழ்வில் நீங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு 1008 எலுமிச்சைப்பழம் அர்ச்சனை, ஆடி அமாவாசை அன்று கடல் தீர்த்தவாரி, மாசி மகம், சிவராத்திரி, மயானக் கொள்ளை, பிரம்ம உற்சவம் ஆகியவை முக்கிய விழாவாக நடைபெறுகிறது.

WhatsApp channel