நரசிங்கபுரம் நரசிம்மர் கோயில் சிறப்புகள்
கோபத்தையும், குளிர்ச்சியையும் தனது கண்களில் காட்டும் அபூர்வ நரசிங்கபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் குறித்து இங்கே காண்போம்.
பரம காருண்யனான ஸ்ரீ நரசிம்மருக்குக் கோயில் பல உள்ளன. அதில் சென்னையை அடுத்த பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது. விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் தொன்மை மாறாமல் தற்போது புதுப்பித்து இருக்கிறார்கள்.
கோபுரத்துக்கு வெளியிலேயே நரசிம்மரைப் பார்த்தபடி சன்னிதி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. கவசம் பூட்டிய கொடிமரம் அதை அடுத்து பலிபீடம் தனிச் சன்னதியில் கருடாழ்வார் என்ற அமைப்புகள் உள்ளன.
அகன்ற பிரகாரத்தில் ஸ்ரீ மரகதவல்லி தனிச் சன்னதி கொண்டிருக்கிறார். இவர் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். அடுத்துத் தனிச் சன்னதியில் ஆண்டாள் நாச்சியாரை உள்ளார். மகாமண்டபத்தில் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் திருக்காட்சி நல்குகிறார்கள்.
மூலஸ்தானத்தில் சுமார் 7 அடி உயரத் திருமேனியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். பிரகாரத்தில் ஆதிலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, விஜயலட்சுமி என அஷ்டலட்சுமி தேவியரும் சன்னதி கொண்டிருக்கின்றனர்.
ஆயுத ராஜன் என்று பொருள் படுகின்ற சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதி கொண்டிருக்கிறார். கருடாழ்வார் தம் திருமேனியில் நாகங்களை ஆபரணமாகக் கொண்டிருக்கிறார். இவரை வழிபடுவதால் நாக தோஷங்கள் நிவர்த்தியாகும். இவருக்குச் சுவாதி நட்சத்திர தினங்கள் மிகவும் உகந்தவை. இந்த உற்சவருக்குப் பிரகலாத வரதன் என்ற திருநாமம் உள்ளது.
ஸ்ரீ நரசிம்ம பிரானின் ஏற்றம் என்ன? கண்கள் இரண்டு இருந்தாலும் ஒரு சமயத்தில் நம்மால் ஒரு விஷயத்தை மட்டுமே காணமுடிகிறது. கோபம், சிரிப்பு, சந்தோஷம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் ஒன்றில் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது.
ஆனால் விஷம விமோசன நரசிம்ம பிரான் ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட செயல்களைச் செய்கிறார் எப்படி? தன்னால் இரண்யனைக் கோபமாகப் பார்க்கிறார், பிரகலாதனைக் குளிர்ந்த பார்வையில் நோக்குகிறார்.
இப்படி கோபத்திலும் குளிர்ந்து இருக்கும் அபூர்வத்தை வெளிபடுத்தம் பெருமாளைத் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்க புறத்தில் காணலாம்.