Sri Seetheswarar: பல்லவர் கால சித்தீஸ்வரர் கோயில்
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சித்தீஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அடுத்துள்ள கிராமத்தில் பெரிய காஞ்சிபுரம் உள்ள சித்தீஸ்வரர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இங்கு ஆவுடையார் அல்லாமல் சிவபெருமான் லிங்க் காட்சியளித்து வருகிறார்.
திருக்கோயிலில் தனித்தனி சன்னதிகளில் செல்வவிநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமான், யோக கோலத்தில் தட்சிணாமூர்த்தி, நின்ற திருகோலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகின்றனர்.
காமாட்சி தேவி நாள்தோறும் நதிக்கரையில் ஈசனை வழிபட்டு வந்ததாகவும் தேவி மஞ்சள் பூசி நீராடியதால் நதியின் நிறம் மாறி மஞ்சளாறு என்று பெயர் வந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் மஞ்சள் நதிக்கரையில் எழுந்தருளி திருடனம் புரிந்தார்.
பல சித்தர்கள் இத்தலத்திற்கு வந்து ஈஸ்ட் அஷ்டமா சித்திகளை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இறைவன் வழிபாட்டுக்காக சித்தர்களால் உண்டாக்கப்பட்ட கிணறு சித்த தீர்த்தம் என வழங்கப்பட்டது. ஞாயிறு, சனி தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபடுபருக்கு பிறவியாகிய நோய் விலகி நிற்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் புராணம் பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளது. சித்தீஸ்வரர் கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
