Thindal Murugan: வற்றாத சுனையுள்ள திண்டல் மலை வேலாயுத சுவாமி!
வற்றாத சுனை கொண்டு இருக்கும் திண்டல் மலை வேலாயுதசுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள திண்டல் மலையில் அமைந்துள்ளது வேலாயுத சுவாமி திருக்கோயில். இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள சிறப்புடையது திண்டல்மலை.
தன்னை வணங்கியோருக்கு வற்றாத வளத்தையும் குன்றாத நலத்தையும் வாரி வழங்கும் வள்ளலாக விளங்குவதைப் போல வரலாற்றுச் சிறப்புமிக்க தேன் உலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் அருள்மிகு வேலாயுத சுவாமியாகக் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார்.
திண்டு போன்று குன்று அமைப்பு உள்ளதால் திண்டல் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படும் இந்த திருக்கோயிலுக்கு ஈரோடு- கோவை நெடுஞ்சாலைகளிலேயே தோரண வாயில் அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
படி மண்டபத்தின் அருகே ஆடிவாரச் சித்தி விநாயகர் சன்னதியும் செல்லும் வழியில் இடும்பன் சன்னதியும் கோயில் உள்ளே நுழைந்த உடன் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதியும், உற்சவர் சன்னதியில் விநாயகர் வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர்.
கோயிலின் வடகிழக்கு பகுதியில் எப்போதும் நீர் வற்றாத நிலையில் அதிசயமான சுனை ஒன்றும் காணப்படுகிறது. ஒரு காலத்தில் திண்டல் ஊர் மக்களுக்குக் குடிநீராகவும், சுவாமி அபிஷேகத்திற்கும் இந்த சுனையிலிருந்தே நீர் எடுக்கப்பட்டது.
மகா சக்தி வாய்ந்த இந்த அர்ச்சனை திருமணத் தடை, செவ்வாய் தோஷம், எதிரிகளால் தொல்லை, காரியத்தடைகள், தீராத நோய்கள் மற்றும் இதர கெடுதலான நிகழ்வுகள் வாழ்வினில் நீங்கிட மேற்படி பூஜைகளில் கலந்துகொண்டு நற்பலன் பெறலாம்.