தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Arani Sri Adhikesava Swami Temple

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2022 07:01 PM IST

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில்
ஆரணி ஆதிகேசவப்பெருமாள் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இக்கோயிலில் மூலவராகவும் உற்சவராகவும் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் காட்சி தருகின்றார். அம்பாளாக ஆதிலட்சுமி தாயார் உள்ளார்.

இக்கோயிலின் தலமரமாக எலுமிச்சை மரம் அமைந்துள்ளது. லட்சுமி, ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர், சிவன், பிரம்மன், நாகராஜன், கணேசன், ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், திருக்கச்சி நம்பி உள்ளிட்ட சாமி சிலைகள் அமைந்துள்ளன.

இக்கோயில் முக்கிய நாட்களாக வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி பிரமோட்சவம் விழா, நவராத்திரி பவித்திர உற்சவம் ,வனபோஜனம், மார்கழி ஏகாதசி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

இக்கோயிலில் உள்ள பெருமாளை ஒன்பது வாரம் புதன்கிழமை தோறும் தொடர்ந்து அர்ச்சனை செய்து பச்சை பட்டு உடுத்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது. 

மேலும் இங்குள்ள அம்பாளையும் பெருமானையும் வேண்டுபவர்களுக்குக் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

WhatsApp channel