தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி பகவான் பார்வை விழுந்துவிட்டது.. செவ்வாய் சிக்கினார்.. பண மூட்டையில் அமரும் ராசிகள்

Lord Sani: சனி பகவான் பார்வை விழுந்துவிட்டது.. செவ்வாய் சிக்கினார்.. பண மூட்டையில் அமரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 09:32 AM IST

Lord Sani: செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானின் மூன்றாவது பார்வை செவ்வாய் பகவானின் மீது விழுகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை வாரி குவிக்கப் போகின்றனர்.

சனி பகவான் பார்வை விழுந்துவிட்டது.. செவ்வாய் சிக்கினார்.. பண மூட்டையில் அமரும் ராசிகள்
சனி பகவான் பார்வை விழுந்துவிட்டது.. செவ்வாய் சிக்கினார்.. பண மூட்டையில் அமரும் ராசிகள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சனி பகவானின் இடமாற்றம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமோ அதே தாக்கம் அவருடைய பார்வையிலும் இருக்கும். அந்த வகையில் சனிபகவானின் 10, 7, 3 ஆகிய பார்வைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவானின் மூன்றாவது பார்வை செவ்வாய் பகவானின் மீது விழுகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை வாரி குவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கும். பணம் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மிதுன ராசி

சனி பகவானின் மூன்றாவது பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. சனி பகவானின் அருளால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். சனிபகவான் உங்களுக்கு முழுமையாக துணையாக இருப்பார்.

கன்னி ராசி

உங்களுக்கு சனி பகவானின் மூன்றாவது பார்வை சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் வசதிகள் மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமையில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9