தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here You Can See Which Deity Worshiped On Masi Magamtirunal Brings Benefits

Masi Magam 2024: மாசி மகம் திருநாளில் யாரை வழிபட வேண்டும்?

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 11:44 AM IST

மாசி மகம் திருநாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே காணலாம்.

மாசி மாசம்
மாசி மாசம்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் இந்த மாசிமகத் திருநாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த திருநாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மாசிமகத் திருநாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் கோயில்களில் இருக்கக்கூடிய குளம் அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் புனித நீராடி பலன்களை பெறலாம். இந்த திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.

சிவன் வழிபாடு

 

சிவபெருமான் கோயில்களில் மாசி மாத திருநாளில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். சிவபெருமான் இந்த திருநாளில் வருண பகவானுக்கு சாப விமோசனம் கொடுத்ததால் இன்று சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

முருகப்பெருமான்

 

பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு முருகப்பெருமான் எடுத்துரைத்த திருநாளாக இந்த மாசி மகத் திருநாள் விளங்கி வருகிறது. இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மகாவிஷ்ணு

 

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வராக அவதாரம் எடுத்த திருநாளாக இந்த மாசி மகத்திருநாள் விளங்கி வருகின்றது. இந்த திருநாளில் பெருமாளை சென்று வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

பார்வதி தேவி

 

மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் தட்சன் மகள் தாட்சாயினியாக பிறந்தார் அதனால் இந்த திருநாள் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து வித சிக்கல்களும் விலகும் என நம்பப்படுகிறது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel