தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: பணத்தில் நீச்சல் அடிக்கும் ராசிகள்.. சூரியன் உருவாக்கிய அதிர்ஷ்ட கடல்.. யோகம் தேடி வருகிறது!

Money Luck: பணத்தில் நீச்சல் அடிக்கும் ராசிகள்.. சூரியன் உருவாக்கிய அதிர்ஷ்ட கடல்.. யோகம் தேடி வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 05:16 PM IST

Lord Sun: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றது.

பணத்தில் நீச்சல் அடிக்கும் ராசிகள்.. சூரியன் உருவாக்கிய அதிர்ஷ்ட கடல்.. யோகம் தேடி வருகிறது!
பணத்தில் நீச்சல் அடிக்கும் ராசிகள்.. சூரியன் உருவாக்கிய அதிர்ஷ்ட கடல்.. யோகம் தேடி வருகிறது!

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும்.

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் தொழிலில் சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார் இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9