தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மே மாதத்தில் சிக்கிய ராசிகள்.. பணமழை யாருக்கு.. சிக்கிய ராசிகளில் நீங்கள் உண்டா?.. வாங்க பாக்கலாம்

மே மாதத்தில் சிக்கிய ராசிகள்.. பணமழை யாருக்கு.. சிக்கிய ராசிகளில் நீங்கள் உண்டா?.. வாங்க பாக்கலாம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 10:06 AM IST

May Month Palan: சில ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்களை அவதிப்பட உள்ளனர். இந்த 2024 ஆம் ஆண்டில் மே மாதம் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண உள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மே மாதம் ராசிபலன்
மே மாதம் ராசிபலன்

குருபகவானின் இந்த இடமாற்றும் சில ராசிகளுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண உள்ளனர். சில ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்களை அவதிப்பட உள்ளனர். இந்த 2024 ஆம் ஆண்டில் மே மாதம் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண உள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

இந்த மாதத்தில் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மே மாதத்தில் உங்களுக்கு பண வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்க கூட முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் பணம் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரிஷப ராசி

 

மே மாதத்தில் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பாதிக்கக்கூடிய அளவுக்கு அதிக செலவுகளை செய்வது உங்களுக்கு நல்லது கிடையாது. ஆபத்தான முதலீடுகளில் இருந்து நீங்கள் தள்ளி இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

இந்த மே மாதத்தில் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரிய செலவுகளை தவிர்ப்பது நல்லது சேமிப்பை அதிகப்படுத்துங்கள் பங்குச்சந்தை முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்ம ராசி

 

இந்த மே மாதத்தில் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது. யாரையும் நம்பி நீங்கள் களத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பணம் முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு செலவுகள் ஏற்படக்கூடும். சேமிப்பு குறையும். நிதி ரீதியாக உங்களுக்கு மோசமான சூழ்நிலை உண்டாகும்.

துலாம் ராசி

 

இந்த மே மாதத்தில் உங்களுக்கு சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel