உங்க முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கா.. அப்போ உங்களுக்கு பண மழை உறுதி.. உங்களுக்கு மச்சம் எங்க இருக்கு?
Moles: நமது முகத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்கக்கூடிய மச்சங்களுக்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மச்சங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதற்கு இந்த பதிவில் காணலாம்
நமது உடலில் பிறக்கும்போதே இயற்கையாக மச்சங்கள் தோன்றுகின்றன. அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மச்சங்களை பெரிதாக நாம் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் நாம் நினைப்பதை விட அதில் பல்வேறு விதமான அர்த்தங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பழங்காலத்தில் இருந்து மச்சத்தின் மீது பல நம்பிக்கைகள் இருந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நமது உடலில் மச்சங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து நமது வாழ்க்கை பண்புகள் ஆளுமை திட்டவைகள் அனைத்தும் உட்பட்டு இருப்பதாக பல்வேறு கணிப்புகள் ஜோதிட சாஸ்திரத்தில் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நமது முகத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்கக்கூடிய மச்சங்களுக்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மச்சங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பதற்கு இந்த பதிவில் காணலாம்
தலைக்கு மேல் மச்சம்
தலைக்கு மேல் பகுதியில் உங்களுக்கு மச்சம் இருந்தால் வாழும் நாட்கள் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மோசமான தருணங்கள் வந்தாலும் அதனை இந்த மச்சம் எளிதாக அதிர்ஷ்ட காரணியாக மாற்றிவிடும் எனக் கூறப்படுகிறது அதே சமயம் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
நெற்றி பகுதி
உங்களுக்கு வெற்றிப் பகுதியில் மச்சங்கள் இருந்தால் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பீர்கள் எனக்கு கூறப்படுகிறது உச்சம் பெற்றவர்கள் என அனைத்து தொடர்களும் உங்களுக்கு இயல்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது முடி வளரும் பக்கத்தில் இருந்தால் அந்த மச்சத்தால் உங்களுக்கு சவாலான சூழ்நிலைகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
அதுவே முடி வளரும் பக்கத்தில் பெண்களுக்கு இருந்தால் அதனால் செல்வம் செழிப்பு அதிர்ஷ்டம் உள்ளிட்டவர்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது இருப்பினும் உறவினர்களோடு உங்களுக்கு நெருக்கம் ஏற்படாது என கூறப்படுகிறது.
புருவங்கள் இருக்கும் பகுதி
புருவங்களின் அருகில் உங்களுக்கு மச்சம் இருந்தால் வெற்றியோடு சேர்ந்த செல்வ செழிப்பு உண்டாகும் என கூறப்படுகிறது மேலும் உங்கள் வாழ்க்கையில் வளம் அதிகரிக்கும் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மூக்கு
உங்களுக்கு மச்சங்கள் மூக்கின் பாலத்தில் இருந்தால் அது அதிகார சக்தி என கூறப்படுகிறது உங்களுக்கு வலிமையான தலைமைத்துவம் குணங்கள் இருக்கும் எனவும் உறுதியான நிலைப்பாடோடு செயல்பட கூடியவர்கள் எனவும் கூறப்படுகிறது குறிப்பாக மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் சஞ்சலமான மனம் உறுதியற்ற நிதி நிலைமை ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
கண்கள்
உங்களுக்கு மச்சங்கள் கண்களுக்கு அருகில் இருந்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது கண்களுக்கு கீழே உங்களுக்கு மச்சம் இருந்தால் பாதுகாப்பற்ற தன்மையை கொண்டிருப்பீர்கள் என கூறப்படுகிறது.
உதடுகள்
உங்கள் உதடுகளை சுற்றி மச்சங்கள் இருந்தால் உங்களுக்கு கவர்ச்சி மற்றும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. உங்கள் ஆளுமை மற்றும் கவர்ச்சி தன்மையால் மற்றவர்களை ஈர்க்கும் காந்த தன்மை கொண்டிருப்பீர்கள் எனக் கூறப்படுகிறது. உதட்டிற்கு மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவ்வப்போது உடல் நிலையில் கோளாறுகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9