Guru Peyarchi 2024 Palan: குரு ஏப்ரல் பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்.. யோகத்தில் 3 ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Palan: குரு ஏப்ரல் பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்.. யோகத்தில் 3 ராசிகள்

Guru Peyarchi 2024 Palan: குரு ஏப்ரல் பணமழை.. நட்சத்திரத்தில் அதிர்ஷ்டம்.. யோகத்தில் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 11, 2024 11:13 AM IST

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நட்சத்திர பெயர்ச்சி
நட்சத்திர பெயர்ச்சி

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

குருபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குருபகவான் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்திற்குள் செல்கிறார். இது சூரிய பகவானின் நட்சத்திரமாகும். 

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும் உயர் அலுவலர்களிடம் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

கடக ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகம் உண்டாகும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9