Pearl : வெள்ளி மோதிரத்தில் முத்து அணியலாமா? முத்து அணிவதற்கான முக்கிய விதிகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pearl : வெள்ளி மோதிரத்தில் முத்து அணியலாமா? முத்து அணிவதற்கான முக்கிய விதிகள் என்னென்ன?

Pearl : வெள்ளி மோதிரத்தில் முத்து அணியலாமா? முத்து அணிவதற்கான முக்கிய விதிகள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Published Apr 15, 2025 10:18 AM IST

முத்து ரத்தினம் சந்திர கிரகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. முத்தை சரியாக அணிந்தால், ஜாதகத்தில் சந்திரனின் நிலையை பலப்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளி மோதிரத்தில் முத்து அணியலாமா? முத்து அணிவதற்கான முக்கிய விதிகள் என்னென்ன
வெள்ளி மோதிரத்தில் முத்து அணியலாமா? முத்து அணிவதற்கான முக்கிய விதிகள் என்னென்ன

இது போன்ற போட்டோக்கள்

முத்து அணிவதற்கான முக்கிய விதிகள்

  • முத்து அணிவது மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது
  • இந்த ரத்தினத்தின் விளைவு எதிர்மறை சிந்தனையை அகற்றவும் உதவுகிறது
  • முத்து அணிவது உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும்.
  • இதை அணிவது வாழ்க்கையில் நம்பிக்கையையும் மன உறுதியையும் அதிகரிக்கிறது.
  • வாழ்க்கையில் அமைதி மற்றும் செழிப்பு அதிகரிக்க முத்து அணிய வேண்டும். 
  • அதிக உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கு, மனஅமைதி தேவைப்படுவோருக்கு இது மிகச்சிறந்தது.

இதையும் படிங்க: நினைத்ததை நிறைவேற்றும் முருகர் வழிபாடு.. இன்று ஏப்ரல் 15 நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் எப்போது?.. விபரம் இதோ!

முத்து அணிவது எப்படி, முத்து ரத்தினக் கற்கள் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள். அதனால் இந்த நாளில் காலை 6 முதல் 8 மணிகக்குள் முத்து அணிவது சிறந்தது.

எந்த உலோகத்தில் முத்துக்களை அணிய வேண்டும்: 

ரத்தினவியலின் படி, முத்து ரத்தினக் கற்களை வெள்ளி மோதிரத்தில் அணிய வேண்டும். திங்கள் அல்லது பௌர்ணமி நாளில் முத்துக்களை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. முத்து ரத்தினத்தை வலது கையின் சுண்டு விரலில் அணிய வேண்டும்.

யார் அணியலாம்:

மன அழுத்தம், பயம், தூக்கமின்மை போன்ற உணர்ச்சி பிரச்னைகள் உள்ளவர்கள் முத்து அணியலாம். 

கடகம், விருச்சிகம், மீனம் உள்ளிட்ட முத்து ராசிக்காரர்கள் அணிந்தால் மிகவும் நல்லது.

முத்து அணிவதற்கான முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

முத்து அணிவதற்கு முன் தூய்மைப்படுத்துவது அவசியம். இந்த ரத்தினத்தை சுத்திகரிக்க, ரத்தினத்தை பால் மற்றும் கங்கை நீரில் நனைக்கவும். மறுநாள், சிவ பெருமானையும், சந்திர தேவனையும் வணங்கிய பிறகு, இந்த ரத்தினத்தை அணியுங்கள். ஜோதிடத்தின் படி, ஒருவர் முத்து ரத்தினத்தை அணிவதற்கு முன்பு ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை பார்க்க வேண்டும். மேலும், ஒரு ஜோதிடரை அணுகுவது நல்லது. இது உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் வராமல் காக்கும்.  ஜாதகத்துக்கேற்ப அணிய வேண்டும். தவறாக அணிந்தால் மனஅமைதி குறையும் என்று சொல்லப்படுகிறது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Aarthi Balaji

TwittereMail
ஆர்த்தி பாலாஜி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 7+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு, ஆன்மிகம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பேராசிரியர் தனபாலன் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள இவர், டாப் தமிழ் நியூஸ், சமயம் தமிழ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்