தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here You Can Know The History Of Adi Swayambu Vinayagar Temple In Coimbatore

HT Yatra: சுயம்புவாக காட்சி கொடுத்த விநாயகர்.. தந்தையை அடையாளம் காட்டிய மகன்..அசரீரியாக வந்த குரல்..ஆதி சுயம்பு விநாயகர்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 30, 2024 05:55 AM IST

விநாயகருக்கு என இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மேகிணறு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய விநாயகர் சுயம்புவாக உருவானவர்.

விநாயகர் கோயில்
விநாயகர் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

மலை உச்சி தொடங்கி மரத்தடி வரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். பல்வேறு கோயில்களில் அமர்ந்து விநாயகர் பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்திருக்கிறார். பக்தர்களின் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறார்.

விநாயகருக்கு என இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மேகிணறு ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய விநாயகர் சுயம்புவாக உருவானவர். வேறு எந்த தலங்களிலும் இல்லாத அளவிற்கு இந்த கோயிலில் விநாயகருக்கு முன்பு நந்திய பெருமான் அமர்ந்திருப்பார். இது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

தல வரலாறு

 

மேகிணறு என்ற சிறு கிராமத்தில் சுயம்பு விநாயகராக காட்சி கொடுத்து வருகிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்னி என்ற ஒரு வேடன் தனது மனைவியோடு காட்டுப்பகுதியில் வசித்து வந்தார் வேட்டையாடி மற்றும் கிழங்குகளை தோண்டி சாப்பிட்டு இந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.

ஒருமுறை கிழங்கு எடுப்பதற்காக பூமியை தோன்றியுள்ளார். அந்தச் செடியின் வேறானது தோண்ட தோண்ட சென்று கொண்டே இருந்தது. கலைத்துப் போய் அந்த வேடன் அமர்ந்து விட்டார். அப்போது அசரீரியாய் ஒரு குரல் அவருக்கு கேட்டுள்ளது. இன்னும் தோண்டினால் உணவு கிடைக்கும் என கேட்டுள்ளது. இந்த குரலால் அதிர்ந்து போன வேடன். குரல் கேட்ட திசை நோக்கி பயணம் செய்தார் அங்கு விநாயகர் உருவம் போல தூரத்திலிருந்து பார்த்த வேடனுக்கு தெரிந்துள்ளது.

உடனே நமக்கு அருள் புரிந்தது விநாயகர் தான் எனக் கூறி அந்த இடத்தை தோண்டி மேலும் ஆழமாக சென்றார். அப்போது அங்கே ஒரு பெரிய கிழங்கு அவருக்கு கிடைத்துள்ளது. அதனை சாப்பிட்டவுடன் அவருக்குள் ஒரு வித்தியாசமான மாற்றத்தை வேடன் உணர்ந்தார். பெரிய கிழங்காக இருக்கின்றது கொஞ்சம் கொஞ்சமாக இதை சாப்பிடுவோம் இனிமேல் வேட்டையாடும் தொழிலை நிறுத்தி விடுவோம் என வேடர் நினைத்துள்ளார்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிழங்கை வேடன் வெட்டி சாப்பிட கிழங்கு வளர்ந்து கொண்டே இருந்தது. தான் வாழ்ந்த மேகிணறு இடத்திற்கு செல்லாமல் கிழங்கு இறக்கும் இடத்திலேயே வேடன் தங்கிவிட்டார். உடனே இந்த தகவல் கேட்டு அனைவரும் அங்கே வந்துள்ளனர். அந்தக் கிழங்கை அனைவரும் தங்களது பங்குக்காக கோடறியை எடுத்து வீசிய பொழுது கிழங்கில் இருந்து ரத்தம் வழிந்து உள்ளது.

உடனே அனைவரும் வெட்டுவதை நிறுத்திவிட்டனர். பின்னர் அந்த இடத்தில் தோண்டி பார்த்தபொழுது அங்கே சிவலிங்கம் இருந்துள்ளது. உடனே அனைவரும் ஆனந்தமாக சிவபெருமானை துதித்துள்ளனர். மண்ணில் இருந்து கிடைத்த காரணத்தினால் அவர் மன்னீஸ்வரர் என அழைக்கப்பட்டார். அன்னிவேடன் அங்கு வாழ்ந்த காரணத்தினால் அது அன்னியூர் என அழைக்கப்பட்டுள்ளது. அதுவே தற்போது மருவி அன்னூர் என அழைக்கப்படுகிறது.

அசரீரியாக குரல் கொடுத்து தனது தகப்பனை அடையாளம் காட்டிய விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேகிணறு கோயிலில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தான் தந்தை இருக்கக்கூடிய இடத்தை மகன் வெளிக்காட்டிய கதையாக இன்று வரை இதனை அடுத்தடுத்த தலைமுறைக்கு அங்கு இருப்பவர்கள் கடத்தி செல்கின்றனர்.

அமைவிடம்

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேகிணறு என்ற சிறிய கிராமத்தில் ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel