Saraswathi Yogam: சரஸ்வதி யோகம்.. பத்ர யோகம்.. புதாதித்திய யோகம்.. யோகங்கள் எப்படி அமைகிறது.. கல்வி அறிவில் மேதை!
Saraswathi Yogam: கல்வியின் நாயகனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்தால் அவர்களுக்கு பத்திர யோகம் கிடைக்கும். அதுவும் நல்ல அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி உள்ளிட்டவைகளை கொடுக்கும். அந்த வகையில் சரஸ்வதி யோகம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவ கிரகங்களின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமையும். வெவ்வேறு விதமான யோகங்களையும் குணாதிசயங்களையும் 12 ராசிக்காரர்களும் பெற்றிருப்பார்கள். நல்ல அறிவாற்றல் ஞாபக சக்தி புத்தி கூர்மை இவை அனைத்தும் சரஸ்வதி யோகம் என்ற யோகத்தால் கிடைக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
Mar 16, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பண மழையில் நனையும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. எச்சரிக்கையா இருக்க வேண்டியது யார் பாருங்க!
எவ்வளவு பணம் சேர்த்தாலும் கல்வி செல்வம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமாகும். ஒருவருக்கு சிறந்த அறிவாற்றல் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம். ஒருவர் எந்த கிரகங்களின் அடிப்படையில் பிறக்கின்றார்களோ அதை பொறுத்து அவர்களுக்கு கல்வி செல்வம் அமையும். அதுவே சரஸ்வதி யோகம் ஆகும்.
கல்வியின் நாயகனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்தால் அவர்களுக்கு பத்திர யோகம் கிடைக்கும். அதுவும் நல்ல அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி உள்ளிட்டவைகளை கொடுக்கும். அந்த வகையில் சரஸ்வதி யோகம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சரஸ்வதி யோகம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன், குரு, புதன் இந்த மூன்று கிரகங்களும் திரிகோணம் அல்லது இரண்டாம் இடத்தில் அமைந்து இருந்தால் அவர்களுக்கு சரஸ்வதி யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் புத்தி கூர்மை அறிவுத்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கல்வித்திறமை
குரு, புதன், சுக்கிரன், இந்த மூன்று கிரகங்களும் கேந்திர திரிகோணத்தில் உங்களுடைய ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் அமைந்திருந்தால் உங்களுக்கு சரஸ்வதி யோகம் கிடைக்கும். இதனால் உங்களுக்கு கல்வியாற்றல், அறிவு கூர்மை, தேவைக்கேற்ற செல்வம், மற்றவர்களிடத்தில் கெளரவம் அனைத்தும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புதாத்தித்திய யோகம்
சூரியன் புதன் இவர்கள் இருவரும் இணைந்து உருவாகின்ற யோகம் தான் புதாதித்தியை யோகம். இந்த யோகத்தால் கல்வியில் ஈடுபாடு, பல கலைகளில் வெற்றி வாய்ப்பு, நல்ல அறிவு, சிந்தனை, பேச்சாற்றல் இவை அனைத்தும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியன் இவர்கள் சேர்ந்து கொடுக்கும் நல்ல பலன்களை புதாதித்த யோகம் ஆகும்.
பத்ர யோகம்
குரு பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி பெற்று உச்சத்தில் இருந்தால் அல்லது ஜென்ம லக்னத்தில் மற்றும் கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு பத்திர யோகம் கிடைக்கும். இதன் மூலம் நல்ல ஞாபக சக்தி, புத்தி கூர்மை, அறிவாற்றல் உள்ளிட்டவைகள் கிடைக்கும். கற்றவர்களின் சபையில் உங்களுக்கு மிகப்பெரிய பங்கு கிடைக்கும். பலருக்கு ஆலோசனை கூறும் திறமை உங்களிடம் இருக்கும்.
பேச்சுத்திறமை
இந்த பத்ர யோகத்தால் உங்களுக்கு பேச்சாற்றல் அதிகமாகும். கல்வி அறிவு அதிகமாக இருப்பதால் உங்களுடைய பேச்சுத் திறமை மற்றவர்களிடத்தில் மேதையாக உங்களை வெளிப்படுத்தும். மற்றவர்கள் மதிக்க கூடிய அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் அமையும். இந்த பத்ர யோகம் உங்களுக்கு கல்வி அறிவை கொடுத்து மற்றவர்களிடத்தில் உச்சத்தில் நிறுத்தும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
