Tamil New Year 2024: தமிழ் புத்தாண்டு வருகை.. வாழ்க்கையை மாற்றும் சிறப்பான திருநாள்.. கொண்டாட்டம் ஆரம்பம்
தமிழ் சமூகத்தின் சிறப்பு திறனாளாக கொண்டாடப்பட்டு வருவது தமிழ் புத்தாண்டு திருநாள். தமிழ் மாதங்களில் முதல் மாதமாக இருக்கக்கூடியது சித்திரை மாதம். இந்த சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்கள் மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர்கள். அதேபோல தங்கள் வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒவ்வொரு முக்கிய நிகழ்வையும் திருவிழாவாக மாற்றி அதனை மிகப்பெரிய பழக்க வழக்கமாக பின்பற்றி கொண்டாடி வருகின்றனர்.
அப்படி மிகப்பெரிய தமிழ் சமூகத்தின் சிறப்பு திறனாளாக கொண்டாடப்பட்டு வருவது தமிழ் புத்தாண்டு திருநாள். தமிழ் மாதங்களில் முதல் மாதமாக இருக்கக்கூடியது சித்திரை மாதம். இந்த சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு நேரம்
வாழ்க்கையில் புதுமையை பெற வேண்டும் என்பதற்காக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டு திருநாள் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வருகின்றது. இன்றைய தினத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழிபாட்டு முறைகள்
தமிழ் வருடப்பிறப்பு தினத்தில் செய்யும் நமது செயல்கள் அனைத்தும் நமது வாழ்க்கையை வளமாக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது.
இன்றைய தினத்தில் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகளை கொண்டு நெல், நகைகள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து அதிகாலை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என கூறப்படுகிறது.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புது உடைகளை அணிந்து கோயிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் அறுசுவைகளும் இடம்பெறும் அளவிற்கு உணவை செய்து இறைவனுக்கு படைப்பது பாரம்பரிய செயலாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதாவது கசப்பு புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்கக்கூடிய உணவுகளை சமைத்து வழிபடுவது மேலும் சிறப்பாகும். பொதுவாக இது போன்ற திருவிழா நாட்களில் பாகற்காய் பலரும் சேர்ப்பது கிடையாது. ஆனால் தமிழ் புத்தாண்டு திருநாளில் பாகற்காய் சேர்க்கப்பட்டு படையலில் வைக்கப்படுவது சிறப்பு விசேஷம் ஆகும்.
இந்த அறுசுவை உணவுகளை படைப்பதற்கு காரணம் வாழ்க்கையில் அனைத்து தருணங்களும் நம்மை நோக்கி வரும் அதனை நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த படைகள் வைக்கப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் மற்றவர்களுக்கு தானம் செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தண்ணீர் மோர் குடை செருப்பு உணவு உள்ளிட்ட அனைத்தையும் தானமாக கொடுக்கலாம். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு மக்களுக்கு தான உங்களை செய்து வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது உணவு கொடுப்பது உள்ளிட்ட அனைத்து செயல்களும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும் என்பது ஐதீகமாகும்.
தமிழ் புத்தாண்டு தினத்தில் இளநீர் தர்பூசணி நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சி மிகுந்த பலன்களை தானம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகமாகும். மேலும் தமிழ் புத்தாண்டு தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்கினால் குறையாத செல்வம் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது.
இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் மஞ்சள் குங்குமம் உப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தால் உங்கள் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9