HT Yatra: மனிதராக வந்த சிவபெருமான்.. பூமிக்கு வந்த அங்காள பரமேஸ்வரி.. நிலையாக நின்ற பெரிய ஆண்டவர்
HT Yatra: எத்தனையோ கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து இங்கு கம்பீரமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநிலை அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில்.

HT Yatra: உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் ஆங்காங்கே கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
Mar 14, 2025 05:08 PMமீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு என தனி கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.
மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வாழ்ந்த காலத்திலும் அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். தங்களது கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமான் மீது கொண்ட அன்பை கோயில்களாக மன்னர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன அதன் ஆஸ்த்தான அதிபதியாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். மிகப்பெரிய மன்னனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்று வரை அதற்கு சாட்சியாக இருந்து வருகிறது. இதுபோல எத்தனையோ கோயில்கள் பல நூற்றாண்டுகளை கடந்து இங்கு கம்பீரமாக இருந்து வருகின்றன.
அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு திருநிலை பெரியாண்டவர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சித்தாமிர்தக் குளத்தில் குளித்துவிட்டு அங்கு இருக்கக்கூடிய பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரி இருவர்களையும் 6 வாரங்கள் வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோயிலில் தனிச்சிறப்பு என்னவென்றால் சிவபெருமானின் லிங்கத்தை சுற்றி 21 மண் உருண்டைகளை வைத்து பக்தர்கள் வழங்கி செல்கின்றனர். அப்படி செய்தால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குறிப்பாக இந்த திருக்கோயிலில் நந்தி மனித உடலுடன் காணப்படுகிறார். இங்கு இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி கொடுத்து வருகிறார். சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது அந்த திருநீரை உட்கொண்டால் நமது உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பாவங்கள் அனைத்தும் விலகும் என நம்பப்படுகிறது.
இன்று வரை பல சித்தர்கள் மற்றும் முனிவர்கள் கண்ணுக்கு தெரியாமல் சிவபெருமானை வணங்கிவிட்டு செல்கிறார்கள் என கூறப்படுகிறது. 21 சுபா கணங்கள் லிங்க வடிவில் இங்கு மூலவராக வீற்றிருக்கக்கூடிய பெரியாண்டவரை தினமும் பூஜை செய்து வருகின்றனர் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல வரலாறு
அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் ஒரு நாழிகை மனித உருவம் எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு திருவிளையாடல் ஆடினார். வேண்டுமென்றே பார்வதி தேவியை சிவபெருமான் கோபப்படுத்தி ஒரு நாழிகை பொழுது நீங்கள் மனிதனாய் பிறக்க வேண்டும் என்று பார்வதி தேவியிடம் சாபம் பெற்றார்.
அதன் காரணமாக இந்த பூமியில் மனிதராக பிறந்தார் சிவபெருமான். மனிதராக பிறந்ததால் தன்னுடைய நிலை மறந்து அங்குமங்கமாக அலைந்து கொண்டிருந்தார். சிவபெருமான் சரியாக இல்லாத காரணத்தினால் அனைத்தின் இயக்கங்களும் தடைபட்டன. இதுகுறித்து தேவர்கள் மனம் கலங்கி பார்வதி தேவியிடம் கூறியுள்ளனர்.
உடனே சிவபெருமானை ஆட்கொண்டு இந்த உலகத்தில் சீராக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். பார்வதி தேவியும் அப்படியே ஏற்றுக்கொண்டு அங்காள பரமேஸ்வரி ஆக பூமியை நோக்கி வந்து அலைந்து கொண்டிருந்த சிவபெருமானை கண்டு மனம் வருந்தி தனது சூலாயுதத்தை தூக்கி வீசினார். பூமியில் பதிந்த அந்த சூலாயுதத்தில் இருந்து ஒரு ஒளி தோன்றியது. உடனே அங்கு சிவபெருமான் தனது பாதங்களை வைத்து நிலையாக நின்றார். அதன் காரணமாகவே இந்த ஊர் திருநிலை என அழைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அங்காள பரமேஸ்வரி அவரை வணங்கினார்.
ஒரு நாழிகை பொழுது நிறைவுற்ற காரணத்தினால் சிவபெருமான் தன்னிலை அடைந்தார். பெரிய மனிதராய் சிவபெருமான் இந்த உலகத்தை வலம் வந்த காரணத்தினால் நீங்கள் பெரியாண்டவர் என அழைக்கப்படுவீர்கள் என பார்வதி தேவி கூறினார். தேவர்கள் அனைவரும் பெரியாண்டவர் என அழைத்தனர் சிவபெருமான் அங்கே பெரியாண்டவர் ஆக சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
