HT Yatra: அடங்காத காளை.. அடக்கி இழுத்து வந்த சிவபெருமான்.. காட்சி கொடுத்த நந்தீஸ்வரர்..!
HT Yatra: அப்படி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் திரு நந்திக்கரை அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்.
HT Yatra: உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அரவணைத்து ஆட்சி செய்திருந்தால் சிவபெருமான் விளங்கி வருகிறது. எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடுகள் கிடையாது.
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமான் புகழ் கொடிகட்டி பறந்தவருகிறது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே கம்பீரமான கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். காலங்கள் கடந்து எத்தனையோ கோயில்கள் இன்று வரை வரலாறுகளை கூறி கம்பீரமாக நின்று வருகின்றன.
அப்படி எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இந்த தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கன்னியாகுமரி மாவட்டம் திரு நந்திக்கரை அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமான் நந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கன்னியாகுமரியில் 12 சிவபெருமான் கோயில்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் ஓட்ட கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. சிவராத்திரி திருநாள் அன்று 12 கோவில்களுக்கும் பக்தர்கள் ஓடிச் சென்று தங்களது வழிபாடுகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றிற்கு இடையே 100 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. பக்தர்கள் ஓடிச் சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அந்தக் கோயில்களில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.
சிவபெருமான் காளையை அடக்கி இழுத்து வந்துள்ளார். அருகில் இருந்த ஒரு குன்றின் மீது காலை வராமல் முரண்டு பிடித்துள்ளது. அப்போது அங்கே காளை மாட்டின் கயிறு மற்றும் கால் தடம் பதிந்துள்ளது தற்போதும் அந்த குன்றில் அந்த தடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் விசேஷமாக நட்சத்திர மண்டபம் அமைந்துள்ளது. 21 நட்சத்திரங்கள் கொண்ட கண் துவாரங்கள் இந்த கோயிலில் காணப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் உள்ளன. குறிப்பாக அந்த மரக்கட்டைகளில் அதி தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு
ஒரு காலத்தில் இந்த பகுதியில் காளை மாடு ஒன்று மிகவும் கொடூரமாக அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனைக் அங்கிருந்த மக்கள் பலமுறை அடக்கம் முயற்சி செய்துள்ளனர் ஆனால் அந்த காளை மாடு அடங்கவில்லை. துன்பம் தாங்க முடியாமல் ஊர் மக்கள் அனைவரும் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்து வந்த சிவபெருமானின் கோயிலுக்கு சென்று காளையை கட்டுப்படுத்துமாறு வேண்டுதல் வைத்துள்ளனர்.
அதன் பின்னர் சிவபெருமான் அந்த காலை மாட்டை இழுத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி வைத்தார். அந்த காளை மாடு அமர்ந்த இடம் அப்படியே பள்ளம் ஆக்கிவிட்டது. பள்ளத்தை விட்டு அதற்குப் பிறகு அந்த காளை மாட்டால் எழ முடியவில்லை. காலப்போக்கில் அது சிவபெருமானின் நந்தியாக மாறிவிட்டது.
இந்த நந்தி தற்போதும் பள்ளத்திற்குள் இருப்பது போல காட்சி கொடுத்து வருகிறது. சிவபெருமானை இந்த நந்தியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த ஊர் திருநந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது.
தனது தாயை கொள்ள வேண்டிய சூழ்நிலை பரசுராமருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் தனது தாயைக் கொன்ற பாவத்தை தீர்ப்பதற்காக நந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து பரசுராமர் பிரார்த்தனை செய்து தனது பாவத்தை நீக்கி கொண்டார் என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்