தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: சிவன் செய்த லிங்க பூஜை.. மன்னராக பதவியேற்பு.. பாவங்கள் போக்கும் இம்மையிலும் நன்மை தருவார்

HT Yatra: சிவன் செய்த லிங்க பூஜை.. மன்னராக பதவியேற்பு.. பாவங்கள் போக்கும் இம்மையிலும் நன்மை தருவார்

Suriyakumar Jayabalan HT Tamil
May 12, 2024 06:40 AM IST

Arulmigu Inmaiyil Nanmai Tharuvar Temple: உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மன்னிப்பு கொடுக்கும் தலமாகவும் பாவம் நிவர்த்தி தலமாகவும் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் விளங்கி வருகிறது.

சிவன் செய்த லிங்கபூஜை.. மன்னராக பதவியேற்பு.. பாவங்கள் போக்கும் இம்மையிலும் நன்மை தருவார்
சிவன் செய்த லிங்கபூஜை.. மன்னராக பதவியேற்பு.. பாவங்கள் போக்கும் இம்மையிலும் நன்மை தருவார்

மன்னர்களால் கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் இன்று வரை அழகு மாறாமல் செழுமையோடு காட்சி கொடுத்து வருகின்றன. இதற்குப் பகுதியை ஆண்டு வந்த மிகப்பெரிய மன்னனான ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்று வரை வரலாற்றுச் சான்றாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சிவபெருமான் கோயில்களும் ஏதோ ஒரு வரலாற்றை சுமந்து வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனி சிறப்ப உண்டு அந்த வகையில் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாக விளங்கி வருவது மதுரை மாவட்டத்தில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்.

இந்த திருக்கோயிலில் லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் காட்சி கொடுத்து வருகிறது லிங்கத்திற்கு பின்புறம் சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரும் அமர்ந்து கோலத்தில் காட்சி கொடுத்த வருகின்றனர். இந்த திருக்கோயில் பூலோகத்தின் கைலாயம் என அழைக்கப்படுகிறது.

உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மன்னிப்பு கொடுக்கும் தலமாகவும் பாவம் நிவர்த்தி தலமாகவும் இந்த இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் விளங்கி வருகிறது.

தல பெருமை

 

எந்த கோயிலுக்கு சென்றாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியில் தான் நாம் எப்போதும் தரிசனம் செய்வோம் ஆனால் இந்த கோயிலில் நாம் சிவலிங்கத்தின் பின் பகுதியை தரிசனம் செய்வோம்.

காரணம் இந்த திருக்கோயிலில் சிவபெருமான் பார்வதி தேவி சேர்ந்து மேற்கு நோக்கி அமர்ந்து லிங்கபூஜை மேற்கொள்கிறார். அதனால் பக்தர்கள் சிவலிங்கத்தின் பின்பக்கத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

மீனாட்சியம்மன் கோயிலில் சிவபெருமானுக்கு பட்டாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக சிவபெருமான், பார்வதி தேவியார் இருவரும் இந்த கோயிலில் எழுந்தருளி மூலஸ்தானத்தை நோக்கி இருக்கக்கூடிய இம்மையிலும் நன்மை தருவார். சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் ஆகிய மூவருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படுவது ஐதீகமாக இருந்து வருகிறது. சிவபெருமானே லிங்கபூஜை செய்வதாக இங்கு ஐதீகம் இருந்து வருகிறது.

தல வரலாறு

 

மலையத்துவஜனன் என்ற மன்னன் மதுரையை ஆண்டு வந்தார் அவருக்கு மகளாக மீனாட்சி தேவி பிறந்தார். சிவபெருமான் மீனாட்சியில் மணந்து கொண்டார். பின்னர் மதுரையை ஆட்சி செய்யும் மன்னராக பொறுப்பேற்றார். எந்த செயலை செய்வதற்கு முன்பும் சிவலிங்க பூஜை செய்வது ஐதீகமாக இருந்து வந்துள்ளது.

அதன் காரணமாக சிவபெருமான் மீனாட்சி இருவரும் லிங்கத்தை ஸ்தாபித்து அதனை பூஜை செய்து சிவபெருமான் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு லிங்கத்தை பூஜை செய்யும் இடமாக இம்மையிலும் நன்மை தருவார் தலம் விளங்கி வருகிறது.

இந்த பிறப்பில் செய்யும் பாவங்கள் இனி வரக்கூடிய பிறவிகளில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிறவியில் செய்யக்கூடிய பாவங்களை இந்த பிறவியிலேயே நிவர்த்தி செய்ய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் மதுரையில் வீற்றிருக்கக்கூடிய இம்மையிலும் நன்மை தருவார் தலத்தில் வந்து வழிபட்டால் பிறவி பாவங்கள் விலகும் என கூறப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel