தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: கண்ணை இழந்த சுக்ராச்சாரியார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. வெள்ளீஸ்வரர் அமர்ந்தார்

HT Yatra: கண்ணை இழந்த சுக்ராச்சாரியார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. வெள்ளீஸ்வரர் அமர்ந்தார்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 06:30 AM IST

Arulmigu Velleeswarar Temple: பல நூற்றாண்டுகள் கடந்தாலும் காலத்தால் அடிக்க முடியாத அளவிற்கு இன்றுவரை கம்பீரமாக பல கோயில்கள் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

கண்ணை இழந்த சுக்ராச்சாரியார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. வெள்ளீஸ்வரர் அமர்ந்தார்
கண்ணை இழந்த சுக்ராச்சாரியார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. வெள்ளீஸ்வரர் அமர்ந்தார்

உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தாலும் குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த சேரன் சோழன் பாண்டியன் உள்ளிட்ட மன்னர்கள் நிலங்களுக்காக போரிட்டு வந்தாலும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளன. அது மட்டுமில்லாமல் தங்கள் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காக மிகப்பெரிய சிற்பங்கள் கொண்ட கோயில்களை அமைத்து சிவபெருமானுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் கடந்தாலும் காலத்தால் அடிக்க முடியாத அளவிற்கு இன்றுவரை கம்பீரமாக பல கோயில்கள் நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமான் நெற்கதிர் விநாயகர் இன திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் பிரகாரத்தில் வீரபத்திரர் காட்சியளித்து வருகிறார். குறிப்பாக ஆட்டு தலையோடு தட்ஷன் வணங்கி கோலத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். குறிப்பாக இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மனிடம் பிரயோக சக்கரம் இருப்பது மேலும் சிறப்பாகும். இந்த கோலத்தில் அவரை காண்பது மிகவும் அரிதாகும்.

மாங்காட்டிற்கு காமாட்சியை வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் இங்கு இருக்கக்கூடிய வெள்ளீஸ்வரர் மற்றும் அருகில் இருக்கக்கூடிய வைகுண்டவாச பெருமாள் உள்ளிட்ட வரை வணங்க வேண்டும் என்பது அதிகமாக உள்ளது.

தல வரலாறு

மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்வதற்காக வாமனர் அவதாரம் எடுத்தார். மகாபலி இடம் மகாவிஷ்ணு தானம் கேட்டுச் சென்றார். உங்களிடம் இருப்பதில் எனக்கு மூன்று அடி வேண்டும் என வாமனர் கேட்கையில் மகாபலி அதனை ஒப்புக்கொண்டார்.

மகாபலியின் குல குருவாகத் திகழ்ந்து வந்த சுக்ராச்சாரியார் வாமனர் அவதாரத்தில் வந்திருப்பது மகாவிஷ்ணு என அறிந்து கொண்டார். மகாபலி இடம் இந்த தானத்தை நீ வழங்க வேண்டாம் என எடுத்து கூறியுள்ளார். ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மகாபலி குல குரு கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வாமனருக்கு கொடுத்த வாக்குறுதி போல் மூன்று அடி கொடுப்பதற்காக தாரை பாத்திரத்தை எடுத்துள்ளார். இதனை கண்டு சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து அந்த தாரை பாத்திரத்தின் நீர் வெளியேறும் துணையை அடைத்துள்ளார். இதனை கண்டுபிடித்த வாமனர் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மண்டாக உருமாறிய சுக்ராச்சாரியார் கண்ணை குத்தினார்.

இதனால் காயமடைந்த அவர் பார்வை இழந்தார் மீண்டும் அந்த பார்வையை பெறுவதற்காக தற்போது இந்த தலத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அம்பிகைக்கு காட்சி கொடுப்பதாக கூறிய சிவபெருமான் முதலில் கடுமையாக வழிபாடு செய்த சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்துள்ளார்.

அதற்குப் பிறகு தனக்காக காத்துக் கொண்டிருந்த அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்தபடி இரு. நான் உனக்கு காட்சி கொடுப்பேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார். அதற்குப் பிறகு தவத்திலிருந்து அம்பிகைக்கு காஞ்சிபுரத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். சுக்ராச்சாரியாருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் தான் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9