HT Yatra: அமைதி வேண்டிச்சென்ற சிவபெருமான்.. சாப விமோசனம் பெற்ற தலம்.. சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அமைதி வேண்டிச்சென்ற சிவபெருமான்.. சாப விமோசனம் பெற்ற தலம்.. சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்

HT Yatra: அமைதி வேண்டிச்சென்ற சிவபெருமான்.. சாப விமோசனம் பெற்ற தலம்.. சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 06:00 AM IST

சோழர்களின் மிகப்பெரிய மாமன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்த தஞ்சை பெரிய கோயில் இன்று வரை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றுதான் ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்தீஸ்வரர் திருக்கோயில்.

அமைதி வேண்டிச்சென்ற சிவபெருமான்.. சாப விமோசனம் பெற்ற தலம்.. சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்
அமைதி வேண்டிச்சென்ற சிவபெருமான்.. சாப விமோசனம் பெற்ற தலம்.. சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்

தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். இமயம் தொடங்கி கன்னியாகுமரி வரை சிவபெருமானுக்கு கோயில்கள் இல்லாத இடமே கிடையாது.

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்ததாக ஆங்காங்கே வரலாறுகளில் கூறப்படுகின்றன. இந்தியாவில் பல கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நின்று வருகின்றன.

நாடுகளுக்காக மன்னர்கள் போரிட்டு வாழ்ந்தாலும் தென்னிந்திய பகுதிகளில் இருந்த மன்னர்களுக்கு குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். குறிப்பாக சோழர்களுக்கு ஆசான குருவாகவும் குலதெய்வமாகவும் சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

சோழர்களின் மிகப்பெரிய மாமன்னன் ஆக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்த தஞ்சை பெரிய கோயில் இன்று வரை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றுதான் ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்தீஸ்வரர் திருக்கோயில்.

திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட பிரிந்து போன தம்பதியர்கள் கோயிலில் இருக்கக்கூடிய வில்வ மரத்தைச் சுற்றி வழிபட்டால் விரைவில் ஒன்று கூடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல பெருமை

இந்த ஏத்தாப்பூர் அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சண்முகருக்கு முன்புறம் மூன்று முகங்களும் பின்புறம் மூன்று முகங்களும் என ஆறுமுகங்களில் காட்சி கொடுத்திருக்கிறார். அது இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது

பஞ்சபூத தலங்களில் இந்த அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்த திருக்கோயில் நீர் தலமாக விளங்கி வருகின்றது. இங்கு அருகில் இருக்கக்கூடிய நதிகள் நீராடி விட்டு வசிஷ்ட மாமுனிவர் சுவாமியை வணங்கியதாக கூறப்படுகிறது.

ஒருமுறை தனது தலைமை பதவி நீடிக்க வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டி இந்திரன் யாகம் நடத்தியுள்ளார். அந்த சமயம் இந்திராணியிடம் ஓர் அழகிய மலரை கௌதமர் கொடுத்துள்ளார். அந்த மலரை கண்டு மயங்கிய இந்திராணி யாகத்தில் கவனம் செலுத்தாமல் கவனக்குறைவோடு இருந்துள்ளார்.

இதன் காரணமாக இந்திரன் நடத்திய யாகம் வெற்றி பெறாமல் போனது. இதன் மூலம் கோபமடைந்த இந்திரன் தனது மனைவியான இந்திராணியின் கவனத்தை திசை திருப்பி அதற்காக கௌதம மாமுனிவர் மற்றும் அவருடைய மனைவி பிரியும்படி சபித்துள்ளார்.

அந்த கௌதம முனிவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார். வழிபாட்டில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து அவரது சாபத்தை நிவர்த்தி செய்துள்ளார் இதனால் கௌதம முனிவரும் அவரது மனைவியும் ஒன்று சேர்ந்தனர்.

தல வரலாறு

பார்வதி தேவியாரின் தந்தை தட்சன் சிவபெருமானை மதிக்காமல் ஒரு யாகத்தை நடத்தி வந்துள்ளார். யாகத்திற்கு செல்லக்கூடாது என பார்வதி தேவியாரிடம் சிவபெருமான் கூறியுள்ளார். தனது மனம் பொறுக்காமல் பார்வதி தேவி அந்த யாகத்தில் கலந்து கொண்டார்.

இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் மன உளைச்சல் ஏற்பட்டு தனியாக தற்போது இருக்கக்கூடிய தலத்தில் தங்கியுள்ளார். சிவபெருமானின் கோபத்தை தணிப்பதற்காக பார்வதி தேவியார் தனது அண்ணனான மகா விஷ்ணுவோடு சேர்ந்து வந்து இங்கு சிவபெருமானை வணங்கி உள்ளனர்.

அதற்குப் பிறகு இங்கு இருக்கக்கூடிய வில்வ மரத்தடியில் சிவபெருமான் காட்சி கொடுத்து பார்வதி தேவியாரை மன்னித்துள்ளார். இந்த திருக்கோயிலில் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். தற்போதும் பிரகாரத்தில் இந்த மரம் இருந்து வருகிறது. பிறந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும் மரமாக இந்த வில்வமரம் விளங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner