HT Yatra: மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்

HT Yatra: மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 18, 2024 06:15 AM IST

HT Yatra: மன்னகள் அனைவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். இதுபோல எத்தனையோ திருக்கோயில்கள் இங்கு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்.

மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்
மகிஷாசுரனை வதம் செய்த சப்த கன்னியர்.. தோஷத்தை நிவர்த்தி செய்த வாலீஸ்வரர்.. சிறப்பு மிகுந்த கோயில்

இது போன்ற போட்டோக்கள்

தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் பல கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். ஒரு பக்கம் போர் நடந்தாலும் சிவபெருமானின் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அனைத்து மன்னர்களும் தங்களது கலைநயத்தை வெளிப்படுத்தி பல பிரம்மாண்ட கோயில்களை இங்கே கட்டிச் சென்றுள்ளனர்.

இயற்கையால் கூட அசைக்க முடியாத அளவிற்கு அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. மிகப்பெரிய சோழனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்க்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

மன்னகள் அனைவரும் தீவிர சிவபக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். இதுபோல எத்தனையோ திருக்கோயில்கள் இங்கு கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயில் இருக்கக்கூடிய மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். தங்களது சீடர்களோடு தட்சிணாமூர்த்தி காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தியோடு சப்த கன்னிகளும் காட்சி கொடுத்து வருகின்றன. சனிபகவான் இந்த கோயிலில் தனி சன்னதி கொண்டு காட்சி கொடுத்து வருகிறார்.

மன அமைதி, தலைவிதி மாற்றம், கல்வியில் மேன்மை பெற வேண்டும் என்பவர்கள் இந்த திருக்கோயிலில் வந்து வழிபட்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி, குடும்பத்தில் மேன்மை, தீராத நோய்கள் குணமடைவது, முக்தி கிடைப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் இங்கு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த திருக்கோயிலில் வந்து வழிபாடுகளை நடத்திச் செல்கின்றனர்.

தல வரலாறு

கருவில் உருவாகாத பெருநாள் தனக்கு அழிவு ஏற்பட வேண்டுமென மகிஷாசுரன் வரம் பெற்றார். இதனால் அதிக பலம் கொண்ட மகிஷாசுரன் தேவர்களை துன்புறுத்து வந்துள்ளார். துன்பங்களை தாங்க முடியாதவர்கள் சிவபெருமானிடம் நாடி சென்றுள்ளனர்.

சிவபெருமான் உடனே பார்வதி தேவியிடம் மகிஷாசுரனை வதம் செய்ய வேண்டி கேட்டுக்கொண்டார். பார்வதி தேவி தன்னிலிருந்து சப்த கன்னியர்களை அனுப்பி மகிஷாசுரனை வதம் செய்ய அனுப்பி வைத்தார். அவர்களும் மகிஷாசுரனை வதம் செய்தனர்.

இதனால் தோஷம் உண்டான சப்த கன்னியர் சிவபெருமானிடம் வேண்டிச் சென்றனர். உடனே சிவபெருமான் பூமிக்குச் சென்று தன்னை வழிபட்டு பூஜை செய்தால் சரியான நேரத்தில் வந்து உங்களுக்கு தோஷ நிவர்த்தி செய்து தரப்படும் என கூறினார். அவர்களுடன் வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார்.

வேண்டுதலில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் சப்த கன்னியர்களுக்கு விமோசனம் கொடுத்து எனது கோயில்களில் இருக்கக்கூடிய அம்பிகைக்கு நீங்கள் காவலாக இருக்க வேண்டுமென அருள் பாலிதுள்ளார். இந்த திருக்கோயிலில் சப்த கன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்று வழிபடுவது போல காட்சியில் அமர்ந்திருக்கின்றனர். இந்த அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. இதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9