HT Yatra: கொடூர சாபத்தை கொடுத்த முனிவர்.. அலைந்து திரிந்த திருமால்.. விமோசனம் கொடுத்த திருமறைநாதர்!
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது தான் மதுரை மாவட்டம் திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் திருமறைநாதர் எனவும் தாயார் திருமுறை நாயகி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
HT Yatra: சிவபெருமான் என்றாலே ஒரு மிகப்பெரிய புத்துணர்வு ஏற்படும். சிவபெருமான் பக்தர்களிடம் அவரைப் பற்றி பேசினால் வாயை மூடாமல் சிவபெருமானின் திருவிளையாடலை கூறிக் கொண்டே இருப்பார்கள். இந்தியாவில் சிவபெருமானுக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது.
பல கோயில்கள் கட்டப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றது. உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்து சிவபெருமானுக்கு இன்று வரை பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்கள் தங்களது பக்தியை நிரூபிப்பதற்காகவே எத்தனையோ கோவில்களை மிகவும் பிரம்மாண்டமாக கட்டி வைத்து சென்றுள்ளனர். இன்று வரை அதற்கு ஆதாரமாக பல இயற்கை சீற்றங்களைக் கடந்து அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.
அந்த வரிசையில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது தான் மதுரை மாவட்டம் திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் திருமறைநாதர் எனவும் தாயார் திருமுறை நாயகி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயில் மிகவும் மருத்துவ குணம் கொண்ட கோயிலாக திகழ்ந்து வருகிறது வாத நோய் உள்ளவர்கள் இந்த திருக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டால் அவர்கள் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பாக சனீஸ்வர பகவானுக்கு வாத நோய் நீக்கிய திருத்தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது.
வாத நோய்க்கு உள்ளானவர்கள் இந்த திருக்கோயிலுக்கு வந்து நல்லெண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த அபிஷேக எண்ணையை எடுத்துக்கொண்டு தங்களது காலில் தேய்த்தால் கூடிய விரைவில் அந்த வாத நோய் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலுக்கு இதுபோல அபிஷேகம் செய்துவிட்டு மூன்றாவது முறை வந்தால் முழுமையாக நிவர்த்தி அடைந்து விடும் என்பது மிகவும் அதிசய செயலாக விளங்கி வருகிறது.
வாத நோய் உள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கூட இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் அவதரித்த ஊராக இந்த ஊர் விளங்கி வருகின்றது.
மாண்டவ்ய முனிவரால் சனிபகவான் முடமாக வாழ வேண்டிய சாபத்தை பெற்றார். அதன் பின்னர் திருமறைநாதனை வழிபட்டு சனிபகவான் சாப விமோசனத்தை பெற்றார். அதன் பொருட்டு இந்த திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு சனிபகவான் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.
தல வரலாறு
அசுரர்கள் மற்றும் தேவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டைகள் நடப்பது வழக்கம். ஒருமுறை இது போன்ற சண்டையின்போது தேவர்கள் திருமாலிடம் அடைக்கலம் அடைந்துள்ளனர். அசுரர்கள் பிருகு முனிவரிடம் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
அசுரர்களை அழிக்க வேண்டி பிருகு முனிவர் நோக்கி திருமால் வந்துள்ளார். அசுரர்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என திருமால் முனிவரிடம் கேட்டுள்ளார். என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர்களை நான் மற்றவர்களிடம் சரண் அடைய கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.
அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் திருமால் தனது சக்கராயுதத்தை பயன்படுத்தி முனிவரின் மனைவியின் தலையை கொய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முனிவர் என்னைப்போலவே நீயும் பல பிறவிகள் எடுத்து இந்த பூமியில் மனைவியை இழந்து வாடுவாய் என சாபமிட்டுள்ளார்.
சாபத்தால் விரட்டின் உச்சத்திற்கு சென்ற திருமால் சாப நிவர்த்தி அடைவதற்காக மதுரை வந்துள்ளார். அதன் பின்னர் ஒரு குளத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கி உள்ளது. அப்போது சாபநிவர்த்தி பெறுவதற்காக சிவலிங்கம் ஒன்றை தேடி உள்ளார். அப்போது திடீரென ஒரு பசு மாடு அந்த இடத்திற்கு வந்து குளத்தில் இருந்த தாமரைப் பூவின் மீது தனது பாலை சொரிந்து உள்ளது.
அங்கே சென்று திருமால் பார்க்கும் போது சுயம்பு மேனியாய் லிங்கமாக சிவபெருமான் காட்சி கொடுத்துள்ளார். அதன் பின்னர் சிவபெருமானுக்கு பல பூஜைகளை செய்து திருமால் சாப விமோசனம் பெற்றுள்ளார். அதுவே தற்போது இருக்கக்கூடிய திருமறை நாதர் ஆவார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9