தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்

தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 13, 2024 06:00 AM IST

Pateeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பட்டீஸ்வரர் தினமும் தாயார் பச்சைநாயகி மற்றும் மனோன்மணி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்
தவம் செய்த காமதேனு.. கன்று உதைத்த தழும்பு.. ஏற்றுக்கொண்ட சிவபெருமான்.. வரம் கொடுத்த பட்டீஸ்வரர்

இது போன்ற போட்டோக்கள்

இன்று வரை அசைக்க முடியாத மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகவும். ஆதி கடவுளாகவும் சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் பல இடங்களில் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அமைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பட்டீஸ்வரர் தினமும் தாயார் பச்சைநாயகி மற்றும் மனோன்மணி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

சிவபெருமான் கோயில்களில் நடராஜர் ஆடும் நிலையில் காட்சி கொடுத்து வருவார். ஆனால் நடராஜர் நடனம் ஆடி முடியும் நிலையில் எப்படி இருப்பார் அந்த நிலையை இந்த கோயிலில் காண முடியும். இந்த திருக்கோயிலில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, சுந்தரர், காளி ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனத்தை கொடுத்துள்ளார்.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவலிங்கத்தின் தலையில் காமதேனுவின் குளம்பு தடம் இருக்கும் அந்த தழும்பு தற்போது வரை லிங்கத்தில் காணப்படுகிறது. இது முக்தி கொடுக்க கூடிய கோயில் என்கின்ற காரணத்தினால் இங்கு ஞான பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி கொடுத்து வருகிறார்.

இந்த கோயிலில் வந்து வழிபட்டால் இனி மறுபிறப்பு கிடையாது என்பது மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசங்கரர் தனது தாயார் முக்தி அடைய வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய பனை மரத்தை வழிபட்டால் அழியா புகழ் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

பிரம்ம தேவரை போல நானும் படைப்பு தொழிலை மேற்கொள்ள வேண்டும் என காமதேனுவிற்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக காமதேனும் சிவபெருமானை நோக்கி மிகப்பெரிய கடுமையான தவத்தை மேற்கொண்டு உள்ளது. அதன் பின்னர் இந்த கோயிலில் புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்தின் மீது தினமும் தனது பாலை சொரிந்து காமதேனு வழிபட்டு வந்துள்ளது.

காமதேனுவின் கன்றாக விளங்கிய பட்டியில் விளையாட்டுத்தனமாக தனது காலால் புற்றை எட்டி உதைத்துள்ளது. இது கண்டு பதற்றம் அடைந்த காமதேனு சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. உடனே சிவபெருமான் காமதேனுவுக்கு காட்சி கொடுத்துள்ளார். உனது கன்றுவின் கால் தடம் தழும்பை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

இது அனைவருக்கும் முக்தி தரக்கூடிய கோயில்களில் முதன்மை கோயிலாக விளங்கும். நீ என்னிடம் தவமிருந்து வேண்டிய படைப்பு வரத்தை உனக்கு திருக்கருக்கா ஊரில் தருகிறேன் அங்கு சென்று தவத்தை மேற்கொள். உனது நினைவாக இந்த கோயில் காமதேனுபுறம் என அழைக்கப்படும். மேலும் உனது கன்று குட்டியின் பெயரால் இது பட்டிபுரி என அழைக்கப்படும். மேலும் எண்ணெய் பட்டீஸ்வரர் என அழைப்பார்கள் என அருள் வழங்கினார்.