HT Yatra: விஷத்தை உமிழ்ந்த வாசுகி.. விஷத்தை அருந்திய சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த நாகநாதர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: விஷத்தை உமிழ்ந்த வாசுகி.. விஷத்தை அருந்திய சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த நாகநாதர்

HT Yatra: விஷத்தை உமிழ்ந்த வாசுகி.. விஷத்தை அருந்திய சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த நாகநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 06:40 AM IST

HT Yatra: மிகப்பெரிய சோழனாக விளங்கி வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு சான்றாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட கோயில்களின் வரிசையில் இருக்கக்கூடிய கோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.

விஷத்தை உமிழ்ந்த வாசுகி.. விஷத்தை அருந்திய சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த நாகநாதர்
விஷத்தை உமிழ்ந்த வாசுகி.. விஷத்தை அருந்திய சிவபெருமான்.. வேண்டுதலால் அமர்ந்த நாகநாதர்

மன்னர்கள் காலம் தொடங்கி தொழில்நுட்ப காலம் வரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். காத்தல், அழித்தல் அன்பு என அனைத்திற்கும் ஆன கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.

இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் இடம் எல்லாம் சிவபெருமானின் திருநாமம் ஒலிக்கும். வரலாறுகளை கடந்து எத்தனையோ கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.

சிவபெருமானை மன்னர்கள் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். தங்கள் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காக தெய்வத்தோடு சேர்த்து மிகப்பெரிய கோயில்களை கட்டி வழிபாடு செய்து வந்துள்ளனர். மிகப்பெரிய சோழனாக விளங்கி வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு சான்றாக விளங்கி வருகிறது.

அப்படிப்பட்ட கோயில்களின் வரிசையில் இருக்கக்கூடிய கோயில்தான் நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்.

தல பெருமை

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் அனுகிரக விநாயகர் என அழைக்கப்படுகிறார். மூலவராக நாகநாதர் விளங்கி வருகின்றார் தாயார் சௌந்தரநாயகி என அழைக்கப்படுகிறார். இங்கு நாக தீர்த்தம் அமைந்துள்ளது. தல விருட்சமாக மூங்கில் மரம் விளங்கி வருகிறது.

இந்தக் கோயில் நவகிரகங்களில் ஒரு தலமாக விளங்கி வருகிறது. கேது பகவானின் திருக்கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகின்றது தனி சன்னதியில் மேற்கு நோக்கி கேது பகவான் காட்சி கொடுத்தவர். மனித உடல் பாம்பு தலை கொண்ட கேது பகவான் சிம்ம பீடத்தில் சிவபெருமானின் சன்னதியில் நோக்கி கைகூப்பியவாறு காட்சி கொடுத்த வருகிறார்.

தன்னால் பாதிக்கப்படக்கூடிய பக்தர்களுக்கு இவர் பின்னால் நன்மைகளை செய்வார் அதனால் இவரை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரை வணங்கி செல்ல வேண்டும். அதற்குப் பிறகு சேதுபதி வழிபாடு செய்ய வேண்டும். செவ்வரளி பூ, கொள்ளு சாதம் உள்ளிட்டவற்றை கேது பகவானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழு தீபங்கள் ஏற்றி அவரை வழிபட்டால் விசேஷமாகும்.

தல வரலாறு

அசுரர்கள் மற்றும் தேவர்கள் இருவரும் அமுதம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்துள்ளனர். வாசுகி என்ற நாகத்தை கயிராக திரித்து பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்த காரணத்தினால் வாசுகி மிகவும் பலவீனம் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் தன்னால் தாங்க முடியாமல் விஷத்தை உமிழத் தொடங்கியது.

இதனால் தேவர்கள் பயந்து சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதன் பின்னர் சிவபெருமான் அந்த விஷயத்தில் விழுங்கி தேவர்களை காப்பாற்றுவார். நமது விஷயத்தில் சிவபெருமான் விழுங்க வேண்டிய நிலை வந்து விட்டது என வாசுகி பாம்பு வருந்தி அதற்கு பிராயச்சித்தமாக தவம் இருந்தது.

பின்னர் வாசுகிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். வாசுகிக்கு பாவ விமோசனம் கொடுத்து அதன் தியாக உணர்வை சிவபெருமான் பாராட்டினார். உடனே தனக்கு அருள் செய்த கோலத்தில் தாங்கள் இங்கேயே காட்சி கொடுக்க வேண்டும் என வாசுகி சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டது. பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சிவபெருமான் நாகத்தின் பெயரைக் கொண்டு நாகநாதராக இங்கே காட்சி கொடுத்தார். நவகிரகங்களின் தலங்களில் இந்த திருக்கோயில் கேது பகவானின் தலமாக விளங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner